பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 நினைவு அலைகள் முதல்வரின் மனமாற்றம் எங்களுக்குத் தெரியாது. “தாங்கள் எப்போது விரும்பினாலும் புறப்படலாம்” என்று கூறிவிட்டுக் கலை நிகழ்ச்சியைத் தொடங்கினோம். நேரம் போனதே தெரியவில்லை. நிகழ்ச்சிகளின்போது, கமலசாமி சில மாணவ மாணவிகளைச் சுட்டிக்காட்டி, இந்தப் பையன் 'அரிசனப் பையன். இப் பெண், போர்டர் மகள் இப்படிச் சொல்லிக் கொண்டே வந்தார் கேட்டு மகிழ்ந்த காமராசர் கடைசிவரை இருந்து, கண்டு பூரித்தார். "ஊக்கப்படுத்துபவர்களிடம் சேர்ந்தால், எவ்வளவு திறமை பெற்றுவிடுகிறார்கள்” என்று வியந்தார். சுதந்திரமாகச் செயல்படுங்கள் இப்படிக் கலகலப்பாகக் காமராசர் இருப்பதைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். ஏழாயிரம் பண்ணை உயர்நிலைப் பள்ளியைப் பற்றிப் பேசினேன். "அய்யா! இங்கே பேசுவதற்கு என்னை மன்னியுங்கள். அலுவல் பற்றியதைக் கேட்கலாமா?” என்றேன். “என்ன?” என்று ஒரே சொல்லில் பதில் வந்தது. “சில வாரங்களுக்கு முன்பு, ஏழாயிரம் பண்ணையில் நடக்கும் உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் என்னை வந்து பார்த்தார். அப் பள்ளிக்குத் தக்கதோர் மான்யம் அளிக்கும்படி கோரும் விண்ணப்பம் ஒன்றை என்னிடம் கொடுத்தார். “கொடுத்தபோது, என்னைப் பார்ப்பதற்கு முன்பு, தங்களைக் கண்டு. தங்கள் காதுகளிலும் அதைப் பற்றிப் போட்டு இருப்பதாகக் கூறினார். என்ன கொடுக்கட்டும் என்று, தாங்கள் குறிப்புக் காட்டுவீர்களென்று காத்திருக்கிறேன். 'தங்களுக்கு வசதிப்படும் நேரத்தைச் சொன்னால், தங்களைக் கண்டு, தங்கள் விருப்பத்தைத் தெரிந்துகொண்டு வருகிறேன்” என்றேன். “வரவேண்டாம், நீங்களே சுதந்திரமாக முடிவு செய்யலாம்” என்றார். “மன்னிக்கனும். இங்கே பேச்சை எடுத்ததற்கு” என்று தழுதழுத்த குரலில் வேண்டினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/153&oldid=787938" இலிருந்து மீள்விக்கப்பட்டது