பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழை பங்காளர் காமராசர் 115 'தப்பில்லை; நான் வகிக்கும் பொறுப்பில் நாள்தோறும் நூறு பேர்களையாவது காணாமல் இருக்க முடியாது. அவர்களுக்குக் காது கொடுக்காமல் முடியாது. நீங்களும்கூட நாளைக்குப் பத்துப் பேர்களையாவது பார்க்க வேண்டியிருக்கும். “அவர்களுக்குக் காது கொடுங்கள். ஆனால் முடிவை உங்கள் மனச்சாட்சிக்கு விட்டுவிடுங்கள். ஒன்றுக்கு ஒன்று முரண் இல்லாவிட்டாலும், போட்டியாக இருக்கும் பத்துக் கோரிக்கைகளை எப்படி ஒருவர் உடனுக்குடன் நிறைவேற்ற முடியும். “வந்தவர்களை மதித்துக் கேட்பதும், சிந்தித்து எது நியாயமோ அதன்படி முடிவு எடுப்பதும் நம் பொறுப்பு” என்றார் காமராசர். “இருந்தாலும்” என்று இழுத்தேன்; காமராசர் வெகுளவில்லை. “உங்களுக்குச் சட்டம் விதிமுறைகள் நன்றாகத் தெரியும் என்பதோடு, துலாக்கோல்போல் நேர்மையாகவும், நாணயமாகவும் நடப்பிர்கள் என்ற நம்பிக்கை கொண்டதால்தான் உங்களை இயக்குநராக நியமித்துள்ளோம். அப்புறம் என்னைக் கேட்டுக்கொண்டு இருப்பானேன்? நீங்களாக மடிவ எடுக்கச் செயல்பட வேண்டியதுதானே. “அதில் எவருக்காவது அதிருப்தி ஏற்பட்டால் என்னிடந்தானே சொல்வார்கள்? நான் உங்களைக் கேட்காமல் ஒரு முடிவுக்கு வந்துவிடுவேனா? நீங்களே எல்லா முடிவுகளையும் எடுங்கள்” என்றார். அப்பப்பா எத்தகைய அழுத்தம்! கோடை வெயிலில், நெடுந்துாரம் நடந்துவந்து களைத்தவன் செவ்விளநீரைப் பருகினால், எவ்வளவு தெம்பு பெறுவானோ, அத்தகைய உணர்வினை அப்போது நான் பெற்றேன். என் பேச்சு எடுப்பாயிருந்தது. என்னுரை மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியர் அவர்களே! ஆதரவுக்கு உரிய இருபால் ஆசிரியத் தோழர்களே! அன்பிற்குரிய அருமைத் தம்பிகளே! தங்கைகளே! மதிப்பிற்குரிய பெற்றோர்களே! பெருமைக்குரிய நிர்வாகிகளே! என் நினைவு, முதற்கண் செ. தெய்வநாயகம்பால் செல்கிறது. அவர், அரசு அலுவலில் ஊறியவர்; நேர்மைக்கும் சிக்க்னத்திற்கும் பெயர் எடுத்தவர். சிக்கனத்தால் அவரிடம் சேர்ந்த செல்வம் பெருங்குவியல் அல்ல; மிகச் சாதாரணமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/154&oldid=787939" இலிருந்து மீள்விக்கப்பட்டது