உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 நினைவு அலைகள் அப்படி இருப்பினும் குடும்பப் பொறுப்பு இருப்பது போன்றே ஒவ்வொருவருக்கும் சமுதாயப் பொறுப்பும் உண்டு என்ற பண்பாட்டு உணர்வினை அவர் கொண்டார். தமது சொத்தில் ஒரு பகுதியைக் கல்வி அறக்கட்டளை யாக்கினார். அவ் வறத்தைக் கொண்டு நடத்தப்படும் இப் பள்ளியில் படிப்போர் அனைவரும் கவனமாகப் படித்து, ஒவ்வோர் ஆண்டும் கேர்ச்சி பெறுதலே, அவருக்கு உண்மையான நன்றி அஞ்சலியாகும் அத்தனை பேரும் தேர்ச்சி பெற இயலுமா? ஏன் இயலாது? ஒரு வகுப்பிலிருந்து மேல் வகுப்பிற்குத் தேர்வு பெற, எந்தப் பாடத்திலாவது, நூறு மதிப்பெண் கேட்கும் பள்ளி ஒன்றாகிலும் உண்டா? இல்லை. அய்ம்பது மதிப்பெண்கள் கேட்கும் பள்ளியும் இல்லையே. அதிகம் கேட்டால், இரு மொழிப் பாடங்களில் நூற்றுக்கு நாற்பதும் மற்றவைகளில் சிலவற்றில் முப்பத்தைந்தும் ஒன்று இரண்டில் முப்பதும் போதும் என்பது தானே, நடைமுறையாக உள்ளது. நெடுஞ்சுவர் தாண்ட முயன்றால், சிலரே சமாளிக்க முடியும். சாலையில் இருந்து, நடைபாதைக்கு ஏறுவது எவருக்கு இயலாது. உங்கள் மரபு என்ன என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள். வள்ளுவன், கம்பன், இளங்கோ, சேக்கிழார், பாரதி, பாரதிதாசன் போன்ற அறிஞர் வழி வந்தவர்கள் நாம்! மேற்கூறியவர்கள் வாழ்ந்து வழி காட்டியது உண்மை. கடுகு சிறுத்தாலும் காரம் போகுமா? இத்தகைய கவிஞர்களின் வழித்தோன்றல்கள், மீண்டும் உயர் காவியங்கள் இயற்றும் நிலைமை பெறாமற் போனாலும், வகுப்புத் தேர்வுகளில் வெற்றி பெறும் அளவு அறிவுகூட இல்லாதவர்களாகிவிட மாட்டார்கள். நாம் கண்டு மகிழ்ந்த கலை நிகழ்ச்சிகள் எதைப் புலப்படுத்தின? "வீடுதோறும் கலையின் விளக்கம்’ என்பத பேராசை அல்ல, என்று காட்டின. புதிய மொழி 'எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்கிறதோ? இது, காட்டுக் காலத்தில் தோன்றிய பழமொழி. எந்தக் குடிசையில், எந்த ஒண்டிக் குடியில், எந்த அறிஞன் தவழுகிறானோ? எந்த உத்தமர் உருவாகிறாரோ? எந்த வல்லுநர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/155&oldid=787940" இலிருந்து மீள்விக்கப்பட்டது