உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏழை பங்காளர் காமராசர் 117 வளர்கிறாரோ? எந்தப் பெருந்தொண்டர் காலத்திற்காகக் காத்துக் கிடக்கிறாரோ? உயர்வுகளைக் காலம்தான் காட்டும். காந்தி அடிகள் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, தன் அன்னையின் நேர் பார்வையிலேயே வாழ்ந்தார். வளர்ந்தார்; ஓரிரு ஆண்டுகளா? இல்லை. நீண்டகாலம். பதினாறு ஆண்டுகள். அவர் அப்படி வளர்ந்த பிறகும் அன்னைக்கு அடையாளங் காண முடியவில்லை. மோகன்தாஸ், உலகத்தின் உத்தமர் என்பது தெரியவில்லை! அவ் வுண்மையை உணர முடியாததால் அல்லவா, அவரிடம் மூன்று சத்தியங்களைக் கேட்டார். ஆசிரியர்களும் ஆசிரியைகளும், மாணவர் மாணவிகளைச் சில மணி நேரம், சில நாள்களே கவனிக்கிறோம். அன்னை புட்லிபாயைவிடத் திறமையாக, பிள்ளைகளின் வளர்ச்சிச் சாத்தியக் கூறுகளை நாம் அளந்துவிட முடியாது. அந்த நிலையில் நம் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும்? ஊக்கமூட்டுவதாக, எழுச்சியூட்டுவதாக, நம்பிக்கையை வளர்ப்பதாக இருத்தலே சரியான முறை. புதியதோர் உலகம் செய்வீர் ஆசிரியப் பெருமக்களே! நீங்கள் பெற்றிருப்பது, பெறற்கரிய பேறு. ஒவ்வொருவர் ஊழியக் காலத்தில் ஆயிரம் முதல் ஆயிரத்தி நானுறு மாணவர்கள் வரையாவது ஆளாக்கிவிடக்கூடும். இப் பெரும் பேற்றினை எண்ணி எண்ணி மகிழுங்கள். ஆசிரியத் தொழிலை வெறும் பிழைப்பாகக் கருதாதீர்கள். அரிய பெருந்தொண்டாகச் செய்யுங்கள். புதியதோர் உலகை உருவாக்குங்கள். பெற்றோர்களே! அதற்குத் துணை நில்லுங்கள். திருமணத்தில் பெரியவர்கள் கவனிக்க வேண்டிய பொறுப்பைச் சிறுமிகளிடம் கொடுப்பீர்களா? சந்தனம், மலர், கற்கண்டு முதலியவற்றை வழங்கும் எளிய பொறுப்புகளை அல்லவா கொடுக்கிறீர்கள்? பிற பொறுப்புகளை வயது வந்தோரிடம் ஒப்படைக்கிறீர்கள். நாட்டுப் பணிகளுக்கும் அதேமுறைதான். அரசியல் ஈடுபாடு, பெரியவர்களுக்கப் பொருத்தம். அரசியல் அறிவே, இளமைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/156&oldid=787941" இலிருந்து மீள்விக்கப்பட்டது