பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 நினைவு அலைகள் வரம்பு. அரசியல் காட்டாற்று வெள்ளத்தில், உங்கள் பிள்ளைகளை இறக்கிவிடாதீர்கள். மாணவர்களுக்கு அரசியல் வேண்டாம் அவர்கள் பத்துப் பதினைந்து ஆண்டுகள்வரை அரசியலில் குதிக்காமல் பத்தியம் இருக்கட்டும். அப்புறம் அறுபது எழுபது ஆண்டுகள்கூட அரசியலில் திளைக்கலாம். மாணவர்கள் விதை நெல்லுக்கு ஒப்பானவர்கள். விதை நெல், ஒன்று பத்தாக விளைவதற்காக எடுத்து வைக்கப்பட்டு இருக்கிறது. கடைக்குச் சென்று அரிசி வாங்கச் சோம்பற்பட்டோ, கடை மூடிவிட்டார்கள் என்றோ, விதை நெல்லைக் குத்திச் சாப்பிடுவது அறிவுடைமை ஆகாது. மாணவர்களை அரசியலுக்குப் பயன்படுத்தாதீர்கள். மாணவர்களை, மாணவர்களாகவே இயங்கவிடுங்கள்! கல்வி கேள்விகளில் முதிர்ந்த பிறகு, அவர்கள் அரசியலுக்கு வந்தால், அரசியல் பண்பட்டதாக, தவறுகள் குறைந்ததாக விளங்கும். பெற்றோர்களே! ஆசிரியர்களை மதியுங்கள்! அவர்களோடு ஒத்துழையுங்கள் மதிப்பு மகிழ்ச்சியூட்டும். டிகிழ்ச்சி பணியின் தரத்தை உயர்த்தும் தர உயர்வு, குடும்பங்களை விளக்கும். நிர்வாகம், பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் இப்போது கண்ணியமாக நடத்துவது போன்றே, என்றும் கண்ணியத்தோடு நடத்துவதாக! இப்படி நீண்ட உரையாற்றினேன். காமராசர் மகிழ்ச்சி அடைந்தார். 15. நிர்வாகச் சீர்கேடு கல்வி அமைச்சரும் உரிமை அளித்தார் முதலமைச்சர் காமராசர், பொதுக் கல்வி இயக்குநராகிய எனக்கு முழு உரிமை கொடுத்தது போலவே, கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியமும் எனக்கு உரிமை கொடுத்திருந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/157&oldid=787942" இலிருந்து மீள்விக்கப்பட்டது