உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிர்வாகச் சீர்கேடு 119 கல்வி அமைச்சரின் விருப்ப நாடி'யைப் பார்த்து அதற்கேற்பப் பரிந்துரைகள் அனுப்ப வேண்டிய நிலையில் என்னை வைக்கவில்லை. நானாகவே முடிவு செய்து அதன்படி பரிந்துரைகளை அனுப்ப உரிமை கொடுத்து இருந்தார். கல்வியைப் பொறுத்தமட்டில் காமராசர் ஆசை என் ஆசை சிற்சில கருத்து மாறுபாடு கல்வி அமைச்சரைப் பற்றி அப்படிச் சொல்ல முடியாது. சிற்சில கருத்து மாறுபாடு உடையவர். இருப்பினும் எனது சிந்தனையிலோ, நிர்வாகத்திலோ குறுக்கிடாமல் முழு உரிமை கொடுத்தது, அவருடைய சிறப்பு ஆகும். என் பரிந்துரைகளோடு சிலபோது மாறுபட்ட போதிலும், இருவருக்கும் இடையே முழு நம்பிக்கையும் நல்ல எண்ணாமம் நிலவின. தலையீடில்லை ஒன்பது ஆண்டு காலம் முதலமைச்சர் காமராசரிடம் பணி கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் கீழ் ஏறத்தாழ ஏழரை ஆண்டுகள் பொதுக்கல்வி இயக்குநராக இயங்கினேன். ‘இன்னாருக்கு வேலை கொடுங்கள்; இன்னாருக்கு மாறுதல் கொடுங்கள்: இன்னாருக்குப் பள்ளிக்கூடங்கள் கொடுங்கள்: இன்ன ஊருக்குக் கொடுக்காதீர்கள்’ என்று இருவருவமே எனக்கு ஆணையிட்டது இல்லை. அது மட்டுமா? ‘இன்னாருக்கு வேலை கொடுக்காதீர்கள். இன்ன ஊர் ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பானது. ஆகவே, அவ்வூருக்கு உதவி செய்யாதீர்கள்’ என்று அவர்கள் சொன்னதும் இல்லை. அவர்கள் இருவரும் என்பால் வைத்திருந்த நம்பிக்கை எனக்கு அமிழ்தமாகப் பயன்பட்டது. நிர்வாக இயந்திரத்தின் சீர்கேடு ஆனால், அரசின் நிர்வாக இயந்திரத்தின் போக்கோ, ஒடவிடாமல் சிக்கவைக்கும் உளைச் சேறாகப் பயன்பட்டக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/158&oldid=787943" இலிருந்து மீள்விக்கப்பட்டது