உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் அய்ந்தாண்டுத் திட்டம் : கல்வித் திட்டத்தை 3-съsuтё&Gвитян 135 பல்வேறு துறைகளின் திட்டங்களை ஆய்ந்து பார்த்து அமைச்சரவைக்கு ஆலோசனை கூற, உயர் அலுவலர் மட்டக்குழு வொன்று செயல்பட்டது. அது மூவர் கொண்டது. வளர்ச்சி ஆணையர் திரு. டி. என். எல். இராகவன் குழுவின் தலைவர் நிதிச் செயலர் திரு. டி. ஏ. வர்கீஸ் உறுப்பினர். - மூன்றாவது உறுப்பினர் நிலையானவர் அல்லர். எந்தத் துறையின் திட்டம் ஆயப்படுகிறதோ, அத்துறையின் செயலர் மூன்றாவது உறுப்பினர். அதாவது, கல்வித் திட்டத்தை ஆயும் போது, கல்விச் செயலரும், வேளாண்மைத் திட்டத்தைத் தணிக்கை செய்கையில், வேளாண்துறைச் செயலரும் உறுப்பினராக இருப்பர் கல்வித் திட்டத்தைத் தணிக்கை செய்யும் சட்டத்திற்கு இயக்குநராகிய என்னை அழைத்தார்கள். உரிய நேரத்தில் கூட்டம் தொடங்கியது. குழுவினர், என்னிடம் அன்பாகவே நடந்து கொண்டார்கள். “உங்கள் திட்டம் எல்லா நிலைகளையும் அடக்கியது! எனவே பெரிது. பறவைப் பார்வை'யில் சரியாக இருப்பதாகவே தோன்றுகிறது. அமைச்சரவைக்கு விரிவாக ஆலோசனை கூற வேண்டியிருப்பதால், ஒவ்வொரு திட்டமாக விளக்கிக்கொண்டே வாருங்கள். நாங்கள் கேட்டு, விவாதித்து முடிவு எடுக்கிறோம்” என்று குழுவின் தலைவர் இனிமையாகப் பேசினார். முன்னர்க்கூறிய அடிப்படைகளை எடுத்துச் சொல்லி, ஒவ்வொரு நிலையில் எவ்வளவு பேர்களைக் கூடுதலாகச் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது, அப்படிச் செய்ய எவ்வளவு ஆசிரியர்கள் - எந்தத் தகுதியுடைய ஆசிரியர்கள் - எவ்வளவு தளவாடங்கள் எவ்வளவு இடவசதி முதலியன தேவை என்று விளக்கத் தொடங்கினேன். எவ்வளவு புதிய பள்ளிக்கூடங்கள், மொத்தத்தில் எவ்வளவு கூடுதல் மாணாக்கர் என்றெல்லாம் எடுத்து விளக்கியபோது, அக் குழு, திட்டத்தில் குறைகாண முடியவில்லை. நூற்றுக்கு நூறு பேர்களைச் சேர்ப்பதாகச் சொன்னால் அதிகம் என்று குறை கூறலாம். "படிக்கும் வயதினர்களில் பாதிப்பேர் சேருவதற்குப் பதில், அறுபது எழுபது விழுக்காட்டினரைச் சேர்ப்போம்” என்று திட்டங் கொடுத்து இருந்தால், குறைவு என்று சொல்லி இருப்பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/174&oldid=787959" இலிருந்து மீள்விக்கப்பட்டது