பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 நினைவு அலைகள் வானத்தில் பறக்காமல், நம் சூழ்நிலைச் சாத்தியக் கூறுகளைக் கவனத்தில்கொண்டு தீட்டப்பட்ட திட்டமாகையால், ஒவ்வொன்றையும் ஏற்றனர். பகல் உணவுத் திட்டத்திற்கு முட்டுக்கட்டை தொடக்கப் பள்ளிகளில் ஏழைப் பிள்ளைகளுக்குப் பகல் உணவு அளிக்கும் திட்டத்திற்கு வந்தேன். நிதிச் செயலர், குறுக்கிட்டார்; இனிமையாகவே குறுக்கிட்டார்! “இது புதியது; பெரியது. எனவே, பல கோணங்களிலிருந்து, நுணுக்கமாக ஆலோசிக்க வேண்டியிருக்கும். ஆகையால் மற்றவற்றை முடித்துவிட்டு, அப்புறம் இதை எடுத்துக் கொள்வோம்” என்றார் திரு. வர்கீஸ், அவர் சொற்படி, மற்ற திட்டங்களை அலசினோம். அநேகமாக எல்லாம் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அப்புறம் 'மதிய உணவுத் திட்டத்தை ஆலோசனைக்கு எடுத்துக்கொண்டார்கள். “ஏற்கெனவே நடந்து வரும் பள்ளிகளுக்கும், ஏழைப் பிள்ளைகள் போவது இல்லை. பகல் உணவு கொடுத்தால், அவர்கள் வருவார்களென்பது, சென்னை மாநகராட்சி கற்பிக்கும் பாடமாகும். “மாநகராட்சி ஒரு சாப்பாட்டிற்கு ஒன்றரை அனா (பத்து பைசா) செலவிடுகிறது. அதை அரசு ஒப்புக் கொண்டுள்ளது. அந்த அடிப்படையில்தான் மதிப்பிட்டிருக்கிறேன். "மேலும், முன்னேற்பாடுகளில் சில திங்கள் கழிந்துவிடும் என்றும், முதல் ஆண்டின் தொடக்கத்திலிருந்து எல்லாப் பள்ளிகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கை சாப்பாடு போடஇயலாது என்ற கருத்தில் கணக்குப் போட்டு உள்ளேன். “அந்த எண்ணிக்கை மாணாக்கர் அனைவருக்கும் இரண்டாம் ஆண்டில் முழுச் செலவு மதிப்பிட்டுள்ளேன்” என்று விளக்கி வந்தேன். விளக்கத்தைப் பொறுமையாகக் கேட்ட பின், திரு. வர்கீஸ் கோடு காட்டினார். “உங்கள் திட்டம், எல்லாவற்றையும் கவனத்தில் கொண்டு போடப்பட்டு உள்ளது. உணவு கொடுத்து மாணாக்கரை அதிகமாக்குவதற்கு எந்தக் குறையும் சொல்ல இயலாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/175&oldid=787960" இலிருந்து மீள்விக்கப்பட்டது