பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் அய்ந்தாண்டுத்திட்டம் கல்வித்திட்டத்தை உருவாக்கினேன்-137 “மாநிலம் தழுவிய அளவில் இப்படி ஒரு திட்டம் இந்தியாவில் எங்கும் நடத்திப் பார்த்த படிப்பினை இல்லை. இது ஒரு கோடி ரூபாய் திட்டம், "எவ்வளவிற்குக் கொண்டுபோய் விடும் என்று சொல்ல முடியாது. நீங்கள் கேட்கிற அளவு நிதியை இந்திய அரசு கொடுக்கும் என்ற உறுதியில்லை. 1. ங்ங் நான் ஒரு யோசனை சொல்லுகிறேன். பகல் உணவுத் திட்டத்தை மட்டும் ஒத்தி வைக்கலாமென்று இக் குழு பரிந்துரைக்கும். அதற்கு இசையுங்கள். இதைப்பற்றி அடுத்த ஆண்டு யோசிப்போம்” என்றார். “பள்ளிகளில் எவ்வளவு பேர்களைக் கூடுதலாகச் சேர்க்க வேண்டும் என்பது உயர்மட்ட அரசியல் முடிவாகும். அதை நிறைவேற்ற என்னென்ன தேவை, எவ்வளவு தேவை - இதைச் சொல்லுவது என் போன்றவர்கிள் வேலை. "அரசியல் மட்டத்தில் எவ்வளவு பேர்களைச் சேர்க்க, நம் தலைவர்கள் நினைக்கிறார்களோ, அவ்வளவு பேர்களைப் பள்ளியில் சேர்ப்பதற்கு மதிய உணவு இன்றியமையாதது. “சேர்க்கைக் குறியீட்டை அப்படியே வைத்துக்கொண்டு, வெற்றி பெற ஒரே வழி, ஏழைப் பிள்ளைகளுக்குச் சோறு போடுவது ஒன்றே! "இலவசப் பாடநூல், எழுது பொருள் போன்றவை போதிய உதவியாகாது. “எனவே, பகல் உணவுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று இதமாகவே வேண்டினேன். - அவர்களும் இதமாகவே, தொடர்ந்து மறுத்து வந்தார்கள். இழுபறி எவ்வளவு நேரம் நீடிப்பது? இறுதியில் எனது துருப்புச் சீட்டை எடுத்துப் போட்டுப் பார்த்தேன். “இது, முதலமைச்சர், காமராசரின் திட்டம். ஏற்கெனவே தொடக்கக் கல்வி நிர்வாகிகள் மாநாட்டில் நாடறிய அறிவித்துவிட்டார். அதற்காகத் தனி வரி தேவைப்பட்டால், போட்டுக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார். "அப்போது அவர் பக்கத்தில் நான் அமர்ந்திருந்தேன். அப்படி இருக்க, இப்போது அத் திட்டத்தைக் காதும் காதும் வைத்தாற்போல் கைவிட்டுவிட நான் எப்படி இசைய முடியும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/176&oldid=787961" இலிருந்து மீள்விக்கப்பட்டது