உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 நினைவு அலைகள் "நீங்கள் மூவரும் இதுபற்றி ஒருமித்த கருத்துக் கொண்டிருப்பதால், இதைத் தள்ளி வைக்கலாம் என்று குழு கருதுகிறது. ஆனால், இயக்குநர் வேண்டுமென்று அடம் பிடிக்கிறார் என்று அறிக்கையில் எழுதி விடுங்கள். அது போதும்” என்றேன். இந்த அணுகுமுற்ை நான் எதிர்பார்த்த பலன் கொடுத்தது. என்ன முடிவுக்கு வந்தார்கள்? 18. பகல் உணவுத் திட்டம் : அமைச்சரவையின் ஆய்வு "ஆம். பள்ளிக்கூடங்களில் பகல் உணவு போடும் திட்டம் அரசின் கொள்கையைப் பொறுத்த நடவடிக்கை. “எனவே, அதை அமைச்சரவையின் முடிவிற்கு விட்டு விடுகிறோம். அமைச்சரவை முடிவுசெய்த பிறகு, தேவையான தகவல்களைச் சரிபார்த்துச் சொல்லுகிற்ோம் என்று நம் குழு முடிவு செய்யலாம். அதற்கு இயக்குநர் இசைவார் என்று நம்புகிறேன்” என்று நிதிச் செயலர் முன் மொழிந்தார். - மற்ற இருவரும் இசைந்தனர். நானும் அதை ஒப்புக் கொண்டேன். அந்தக் கண்டம் தப்பிற்று. = சில வாரங்களுக்குப்பின், அமைச்சரவையின் நிதிக் குழு கூடிற்று. --- == ஒவ்வொரு துறையும் அனுப்பியுள்ள புதிய திட்டங்களையும் வரவு செலவு கணக்கையும் பார்த்தது. எதைச் சேர்ப்பது எதை விடுவது என்பது பற்றி முடிவு எடுத்தது. வரிசைப்படி, கல்வித்துறைத் திட்டங்கள் ஆலோசனைக்கு வந்தன. அப்போது நிதிச்செயலர் முதலில் பேசினார். "அரசியல் அமைப்புச் சட்டத்தின் நெறிக் கொள்கைப்படி பதினான்கு வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர் அனைவரையும் இலவசமாகப் படிக்கவைக்க வேண்டுமென்பதைக் கவனத்தில் கொண்டு, கல்வித்துறைத் திட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. “அவற்றைத் தனித்தனியாகப் பார்க்கும்போது, குறையேதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/177&oldid=787962" இலிருந்து மீள்விக்கப்பட்டது