பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 - நின்ைவு அலைகள் ஒவ்வோர் துறையின் திட்டங்களையும் ஆய்ந்து ஏற்றுக் கொண்டவற்றிற்கு எவ்வளவு ஒதுக்குவதென்று பரிந்துரைக்கும் பொறுப்பு, அதற்கான செயற் குழுவின் பொறுப்பாகும். அந்தச் செயற் குழுக்கள், எங்கெங்கே, எப்போது, எவருடைய தலைமையில் கூடுமென்பதை நாங்கள் கூட்டத்துக்கு வந்ததுமே அறிவித்தார்கள். * சர். வி. டி. கிருஷ்ணமாச்சாரியாரின் உரை முடிந்ததும் செயற் குழுக்களுக்குச் செல்ல எழுந்திருந்தோம். பேராசிரியர் உமாயூன் கபீர் பாராட்டு அவ் வேளை, இந்திய கல்வி அமைச்சகத்தின் செயலர், பேராசிரியர் உமாயூன் கபீர், விரைந்து வந்து, நம் கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியத்திடம் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டார். “இந்தியாவில் வேறெந்த மாநிலமும் நினைக்கக்கூடத் துணியாத, பள்ளிப் பகல் உணவுத் திட்டத்தை நீங்கள் சேர்த்திருப்பது பற்றி மகிழ்ச்சி. ஏழைப் பிள்ளைகளைப் பள்ளிகளுக்கு ஈர்த்து, அவர்களைக் கல்வியில் அக்கறை கொள்ள உதவுவது, பகல் உணவு. இது மிக நல்ல திட்டம். “மொத்த ஒதுக்கீட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டி யிருந்தாலும் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டாம். இதைச் சேர்ப்பதில் உறுதியாக இருக்கும்படி, உங்கள் அலுவலருக்குச் சொல்லி அனுப்புங்கள்” என்று கூறினார். கல்வி அமைச்சர், அருகில் நின்று கொண்டிருந்த என்னை நோக்கி, பகல் உணவுத் திட்டத்தை வற்புறுத்தும்படி ஆணையிட்டார். அரசு நிலை விளக்கம் கல்வி பற்றிய செயற்குழு கூடிற்று. பேராசிரியர் உமாயூன் கபீரே, அதற்குத் தலைமை தாங்கினார். இந்திய அரசின் நிதி அமைச்சகம், கல்வி அமைச்சகம், திட்டக் குழு ஆகியவற்றின் அலுவலர்கள் வந்திருந்தார்கள். திட்டத்தில் சேர்த்துள்ள ஒவ்வொன்று பற்றியும் அதன் செலவை எந்த அடிப்படையில் மதிப்பிட்டோம் என்பதையும் விளக்கினேன். அவற்றில் குற்றங் காண முடியவில்லை. பொதுவாக, இரண்டொரு குறைகளைக் கூறினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/189&oldid=787974" இலிருந்து மீள்விக்கப்பட்டது