உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமராசர் காப்பாற்றினார் 153 காமராசர் காப்பாற்றினார் அந்த நிலையில், முதலமைச்சர் காமராசர் தலையிட்டார். 'பகல் உணவுத் திட்ட ஒதுக்கீட்டில் மட்டும் கை வைக்காதீர்கள் என்று ஆணை இட்டார் முதல்வர். “சரிங்க. வேறு திட்டங்களில் வேண்டிய அளவிற்குக் குறைத்துக்கொண்டு, மொத்த திட்டங்களைச் சரி செய்துவிடுகிறேன்” என்று நொடியில் பதில் கூறினார் திருவாளர் இராகவன். இதுவே, அக் கால அலுவலர்களின் தனிச் சிறப்பு. அதோடு, கூட்டம் கலைந்தது. திட்டமிட்டபடி மூன்றாம் நாள் மாலை, புதுதில்லியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டோம். சென்னைக்குத் திரும்பினோம் ‘கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரசில் குளுகுளு பெட்டியில், ஒரே அறையில் திரு. ஆர். எம். சுந்தரம், அய். சி. எஸ்சுக்கும், சென்னை மாநில மின்துறைத் தலைமைப் பொறியாளர் திரு. வி. பி. அப்பாத்துரைக்கும் எனக்கும் மூன்று இடங்களை ஒதுக்கியிருந்தார்கள். ஒரிடம் கடைசிவரை காலியாக வந்தது. இரவு ஏழுமனி அளவில் இரயில் புறபபடடது. அனறரவு நாங்கள் ஏதும் வம்பளக்கவில்லை. ஒன்பது மணிக்கெல்லாம் மேவரும் உறங்கிவிட்டோம். அடுத்தநாள் காலை ஒன்பது மணிக்கு அரட்டை அடிக்கத் தொடங்கினோம். திரு. சுந்தரமே பேசினார். பகல் ஒரு மணிவரை துளைத்தபடியே இருந்தார். எதைப் பற்றி? பகல் உணவுத் திட்டம் பற்றி அது தேவையற்ற கானல் நீர் தேடுவதாகும்; அதில் மோசடி அதிகமாகும். கெட்ட பெயர் வந்து சேரும். இப்படியாக ஒரே பாட்டைப் பாடி வந்தார். தான், “லேபர் கமிஷன’ராகக் கண்டவற்றை விவரித்துக் கொண்டே வந்தார்.அவர் மூன்று மணிக்குமேல் பேசி வந்ததை நான் எதிர்த்துப் பேசவில்லை. 'அப்படியா! சரிங்க இவ் விரண்டையும் அடிக்கடி சொன்னேன். பகல் உணவு, எங்கள் அறைக்கு வந்தது. அப்போது, அப்பாத்துரையார் தடுத்தாட்கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/192&oldid=787977" இலிருந்து மீள்விக்கப்பட்டது