உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 நினைவு அலைகள் ‘நேற்றைய கூட்டத்தில், இது அரசு மட்டத்தில் முடிவு செய்ய வேண்டிய திட்டம் என்று இயக்குநர் சொன்னபோது, நீங்களும் தான் இருந்தீர்கள். இப்போது மட்டும் எப்படி அவராக முடிவு செய்வார்? இதை விட்டு விடுங்கள்” என்றார் அப்பாத்துரையார் அதோடு அதுபற்றிய பேச்சு நின்றது. அரசு என்ன செய்தது? மாநில அரசு 1956-57 ஆம் ஆண்டிற். கான் வரவு செலவு திட்டத்தில் சேர்க்கப்பட்ட பல புதிய செலவினங்களில் பகல் உணவுத் திட்டச் செலவும் சேர்ந்தது. வரவு செலவு திட்டம் ரகசியமானது. எனவே, எவரும் இதைப் பற்றி, நாலு பேர் அறியப் பேசவில்லை. மலபார் மாவட்டத்தில் நான் கண்டதும் கேட்டதும் வரவு செலவு திட்டம் வெளியாவதற்கு முன், 1956ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 6ஆம் நாள் நான், உரியவர் அழைப்பின் பேரில், மலையாள மாவட்டத்திற்குச் சென்றேன். அப்போது மலையாள மாவட்டம், சென்னை மாநிலத்தில் இணைந்திருந்தது. மலையாளத்தில் அனைக்கரா என்பது ஒர் ஊர். அவ்வூரில் தான் திருமதி. அம்மு சுவாமிநாதன் என்ற பொதுநலத் தலைவர் பிறந்தார். அவர் சென்னையில் காங்கிரசின் முன்னணியில் இருந்தார். சென்னை மாநகராட்சியில் உறுப்பினராக இருந்தார். தன்னாட்சி இந்தியாவில் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அருமையாகத் தொண்டு ஆற்றினார். அவ் வம்மையாரின் ஊரில், அவர் குடும்பத்தார், ஒரு நல்ல பொது நூலகத்தை நடத்தி வந்தார்கள். அம்மையாரின் தம்பி திரு.கோவிந்தன் நாயர் என்று நினைவு, அந் நூலகத்தின் தலைவராக இருந்து நற்பணியாற்றி வந்தார். அவர், அந் நூலக ஆண்டு விழாவிற்கு என்னை அழைத்தார். அவ் வழைப்பினை ஏற்றுக் கொள்ளும்படி அம்மையார் பரிந்துரைத்தார். அவ் வூரில், ஆதாரப் பயிற்சிப் பள்ளி ஒன்று செம்மையாக நடந்து வந்தது. அதன் ஆண்டு விழாவில் தலைமை ஏற்கும்படியும் இரண்டு நிகழ்ச்சிகளையும் ஒரே நாளில் வைத்துக் கொள்வதாகவும் கூறினார். அக் கால கட்டத்தில் நான் சாரண இயக்கத்திற்கு மாநில ஆணையர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/193&oldid=787978" இலிருந்து மீள்விக்கப்பட்டது