உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காமராசர் காப்பாற்றினார் 155 மலபார் மாவட்டத்தின் சாரன்னப் பாசறை, மன்னந்தாடி என்ற வேறொரு ஊரில் நடப்பதாக இருந்தது. அது ஒரு நாள் காலை எட்டு மணிக்குத் தொடங்குவதாகத் திட்டம். அதோடு பாலக்காடு நகரத் தொடக்கப் பள்ளி ஆசிரிய மைய ஆண்டு விழாவையும் சேர்த்துக் கல்வி அலுவலர்கள், இரண்டு நாள் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். திட்டமிட்டபடி 6. 1. 1956 காலை, அனைக்கரா போய்ச் சேர்ந்தேன். அதற்கான இரயில் நிலையத்திற்குக் கோவிந்தன் நாயர் உட்படப் பலர் வந்து வரவேற்றார்கள். எதிர்பாராத நிகழ்ச்சி அவர்களில் ஒருவர், பெரிந்தல்மண்ணா என்ற ஊரில் நடந்து வந்த, மாவட்ட ஆட்சிக் குழுவின் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் ஆவார். அவர் பெரிய மாலையை அணிவித்துவிட்டு, “இன்று மாலை, அனைக்கராவிலிருந்து மன்னந்தாடிக்குச் செல்லும்போது, பெரிந்தல்மண்ணா வழியாகவே செல்ல வேண்டும். அந் நெடுஞ்சாலை எங்கள் பள்ளியின் பக்கந்தான் செல்லுகிறது. “முன்கூட்டியே அழைக்காமையை மன்னித்து, அலுப்பைப் பொருட்படுத்தாமல், எங்கள் உயர்நிலைப் பள்ளியைப் பார்வையிட்டு, கற்போரையும், கற்பிப்போரையும் தாங்கள் வாழ்த்தக்கூடுமானால், அது எங்களுக்குப் பெரும்பேறாக இருக்கும்” என்று கூறி அழைத்தார். மாவட்டக் கல்வி அலுவலர், அதை ஆதாகக, எனககும விருப்பம். ஆனால், இந்த நிகழ்ச்சியை ஒப்புக் கொள்ளுவதானால், இன்று தங்களுக்குச் சிறிதும் ஒய்வு இருக்காது. ஏனென்றால், உயர்நிலைப் பள்ளி நிகழ்ச்சியை நான்கு மணிக்குள் முடித்துக் கொண்டால்தான், இந்த மலைப் பகுதியில், பாதுகாப்பாக வீடு போய்ச் சேர முடியும்” என்றார். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் நான் அதிகம் தாட்சணியப்பட்டவன். அவர்கள் அழைப்பை மறுக்க, எனக்கு மனம் வராது. எனவே, திரு. கோவிந்தன் நாயரைப் பார்த்து, "நீங்கள் என்னை, உங்கள் ஊரில் தாமதப்படுத்தாமல், அனுப்பி வைத்து உதவி செய்தால், நான் இப் பள்ளியின் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள விரும்புகிறேன்” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/194&oldid=787979" இலிருந்து மீள்விக்கப்பட்டது