பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

755 நினைவு அலைகள் அவர் இசைந்தார். நானும் கூடுதல் நிகழ்ச்சிக்கு இசைந்தேன். அனைக்கரா நிகழ்ச்சிகள் இரண்டும் சிறப்பாக நடந்தன. ஆதாரக் கல்வி முறை சரியான உளவியலை அடிப்படையாகக கொண்டது. சடங்குகள், சமயங்களின் நல்லுணர்வைக் கெடுத்தது போல், நூற்றல், நெய்தல் ஆகியவை பற்றிய சடங்குகள் இந்தச் கல்வி முறையைச் சாகடித்தன. பயிற்சிப் பள்ளி ஆண்டு விழாவிற்கும் நூல் நிலைய ஆண்டு விழாவிற்கும் பல பொதுமக்கள் வந்திருந்து பெருமைப். படுத்தினார்கள். கல்வி சிறந்த கேரளம் ஆயிற்றே! 21. மாணாக்களின் பசி மயக்கம் முற்பகல் இரு நிகழ்ச்சிகள் இருந்த போதிலும் அவற்றை முறையாக முடித்துக்கொண்டு, பெரிந்தல்மண்ணா உயர்நிலைட் பள்ளிக்கு உரிய நேரத்தில் போய்ச் சேர்ந்தேன் அப் பள்ளி வளாகம் முழுதும் நிழல் தரும் பெருமரங்கள் தழைத்து நின்றன. அவற்றின் நிழலில் மாணவர்கள் அமர்ந்து இருந்தார்கள். ஒவ்வொரு வகுப்பின் ஒவ்வொரு பிரிவினருக்கும் தனிச் சதுக்கம் என்ற முறையில் அவர்களை அமர வைத்திருந்தார்கள். குளுமையான, எழில்மிக்க இயற்கைச் சூழலும் பள்ளிக்கூட ஒழுங்கும் என்னை மகிழ்விக்க, மேடையில் அமர்ந்தேன்; என்னுடன் வந்த கல்வி அலுவலர்களும் தலைமை ஆசிரியரும் மேடைமேல் அமர்ந்ததும், கூட்டம் தொடங்கியது. முதல் நிகழ்ச்சி, இறை வணக்கம். அது வடமொழியில் அமைந்தது. அதைப் பாடும்போது, அனைவரும் எழுந்து நின்றோம். ஆழந்த அமைதியில் இருந்தோம். அடுத்து? மலையாள மொழியில், வழிபாட்டுப் பாடல் பாடினார்கள். அப்போதும் எல்லோரும் அமைதியாக நின்றபடி இருந்தோம். இரண்டிற்குமாக, மூன்று நான்கு மணித்துளிகளே பிடித்து இருக்கும். அதற்கு இடையில்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/195&oldid=787980" இலிருந்து மீள்விக்கப்பட்டது