பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணாக்கரின்.பசி மயக்கம் - 157 வடமொழியில் பாடிய இறை வழிபாட்டின்போதே இரு ஆசிரியர்கள், ஒசை படாமல் வந்து, மயக்கம் போட இருந்த ஒரு சிறுவனை எழுப்பி, தாங்கியபடியே அழைத்துச் சென்றார்கள். ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. வழிபாட்டு அமைதியைக் கலைக்க விரும்பாததால், மேடையில் இருந்தோரிடமும் அதைப்பற்றிக் கேட்கவில்லை. மலையாள வழிபாட்டின்போது, முன்புபோல், வேறொரு சதுரத்தில் இருந்த மற்றொரு சிறுவனை வேறிரு ஆசிரியர்கள் தாங்கிக் கொண்டுபோகக் கண்டேன். என் மனம், ஒளியிலும் விரைந்துசெயல்பட்டது. தானாக ஒரு முடிவிற்கு வந்துவிட்டது. என்ன முடிவு? - ‘அதிகப்படியான முன்னெச்சரிக்கை காரணமாக, தலைமை யாசிரியர், இந்த மாணவ மாணவிகளை, திறந்த வெளியில், சுரீலென வெயில் காயும்போதே உட்கார வைத்திருக்கலாம். ‘அச் சூடு தாங்காது, இப்படிச் சிலர் மயக்கம் போட்டிருக்கலாம்; கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தினால், மேலும் சிலர் மயங்கி வீழ்ந்தால், அதனால் கிளம்பும் பழிச் சூறாவளி என்னையும் சாடலாம். எனவே, கூட்டத்தை இதோடு முடித்து விடுவதே அறிவுடைமை. இம் முடிவுக்கு நான் வரவும், மலையாளப் பாட்டு முடியவும் சரியாயிருந்தது. நிகழ்ச்சி நிரலை ஒதுக்கினேன். நான் எழுந்து பேசினேன். “தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவருக்கும் எனது நன்றி. “நீங்கள் கல்வியில் முதிர்ச்சி பெற்று, வாழ்வில் வளம்பெற்று வாழ, வாழ்த்தி அமைகிறேன். இத்துடன் கூட்டம் முடிகிறது” என்று கூறிவிட்டேன். என் அலுவல் நாளில் இவ்வளவு சுருக்கமாக, எப்போதும் எங்கும் எந்த நிகழ்ச்சியிலும் பேசியது இல்லை. தலைமையாசிரியர் என்னையும் உடன் வந்தோர்களையும் தமது அறைக்கு அழைத்துச் சென்றார். உள்ளே சென்று அமர்ந்த நான், “தலைமை ஆசிரியரே! பிள்ளைகளை அதிகநேரம் வெயிலில் காயும்படி செய்துவிட்டீர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/196&oldid=787981" இலிருந்து மீள்விக்கப்பட்டது