பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 நினைவு அலைகள் போலும் அதனால்தான் இருவர் மயங்கி வீழ்ந்துவிட்டார்களோ" என்று பதற்றத்தோடு கேட்டேன். தலைமையாசிரியரோ, அமைதியாக, "தாங்கள் நினைக்கிறது போல் ஒன்றும் தவறு செய்யவில்லை. “தங்கள் இளகிய மனம், இருவர் களைத்து மயங்கியதையே தாங்கிக் கொள்ள இயலவில்லை. "என் தலையெழுத்து, நாள்தோறும் அய்ம்பது, அறுபது சிறுவர் சிறுமியர் சோர்ந்து விழுவதைக் காணச் சபித்துள்ளது இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கத்தில், இந்த உயர்நிலைப் பள்ளிக்கு மாறுதல் ஆகிவரும்வரை நான் இப்படிப்பட்ட வேதனையைப் பார்த்ததில்லை” தலைமை ஆசிரியர் பேசிக் கொண்டு இருக்கையிலேயே குறுக்கிட்டேன். "வெயிலில் இருந்ததால் மயக்கம் அடையவில்லை என்றால் பின் ஏன் இப்படி, நாள்தோறும் நடக்கிறது?’ என்று கேட்டு மடக்க முயன்றேன். பொறுமை இழக்காத தலைமை ஆசிரியர், "தாங்கள் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே இங்கு வந்திருக்கிறீர்கள். எங்கு நோக்கிலும் குன்றும் சரிவுமே, அவற்றைக் கடந்து பள்ளிக்கு வருவதே, சிறுவர் சிறுமிகளைச் சோர்வு அடையச் செய்யும். “பெரும்பாலோர் அய்ந்து மையல் நடந்து வரவேணடி இருக்கிறது.நீண்டநடையால் தளர்ந்துவிடும் அவர்களை வேறொரு தொல்லையும் வாட்டுகிறது. “காலையில் கஞ்சி குடித்துவிட்டு, பள்ளிக்கு வரும் பிள்ளை. களில் பலர், பகலில் உண்பதற்கு, சிற்றுண்டியும் கொண்டுவர இயல்வதில்லை. 'பகல் முழுதும் பட்டினி கிடந்து, படித்துவிட்டு, வீட்டிற்குத் திரும்பிய பிறகே, ஏதோ ஒரளவு உண்ணக்கூடும். பசியின் கண்ளப்பாலும் நீண்ட நடையின் அலுப்பாலும் ஒவ்வொரு பிற்பகலும் அய்ம்பது அறுபது பேர்கள், மயக்கம் அடைகிறார்கள்' என்று விளக்கினார். i. “இதற்குப் பரிகாரம் ஏதாவது செய்ய முடியுமா?” என்றேன். “வந்த புதிதில், இந் நிலையால் அதிர்ச்சி அடைந்த நான், ஊர்ட் பெரியவர்களிடம் இதை எடுத்துச் சொல்லிப் புலம்பினேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/197&oldid=787982" இலிருந்து மீள்விக்கப்பட்டது