உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணாக்கரின் பசி மயக்கம் 159 'இன்னும் சில வாரங்களில் நெல் அறுவடை வரப்போகிறது. அப்போது, நாங்கள் தான்யம் கொடுக்கிறோம். அதைச் சேர்த்து வைத்துக்கொண்டு, சாப்பாடு போட ஏற்பாடு செய்ய முடிந்தால் செய்யுங்கள், நாங்கள் செய்யக்கூடிய க. தானியதானமே என்று சில பெரியவர்கள் கூறினார்கள். "அப்படியே பலரும் மகிழ்ச்சியுடன் உதவினார்கள்; கணிசமான நெல் சேர்ந்தது: கணக்கு இட்டோம் “பகல் உணவு பள்ளியிலேயே போட ஏற்பாடு செய்வதாக அறிவித்தோம். “முன் பழககம இலலாமையான எங்கள் கணக்குத் தவறிவிட்டது. “தற்பெருமை முதலிய காரணங்களால் அறுபது மாணாக்கருக்குமேல் பள்ளியில் இலவசமாகச் சாப்பிடமாட்டார்கள். “அவ்வளவு பேர்களுக்கு ஒராண்டிற்குப் போதுமான நெல் சேகரித்துவிட்டோம், என்ற நம்பிக்கையில் பிள்ளைகளுக்கு அன்னதானம் தொடங்குவதாக, அறிவித்துவிட்டோம். "அறிவிப்பைக் கண்டதும், நூற்று இருபது பேர்கள் முன் வந்து, பெயர்களைப் பதிந்து கொண்டார்கள். “எங்களுக்குச் சங்கடமான நிலை; எவரையும் விலக்கவும் முடியவில்லை. உடனே மீண்டும் போய், தானம் கேட்கவும் துணிவில்லை. ஆனது ஆகட்டும் என்று, கேட்ட அனைவருக்கும் பகல் உணவு போடத் தொடங்கிவிட்டோம். 'அய்ந்து திங்களில், அரிசி தீர்ந்துவிட்டது. சில வாரங்களாக மீண்டும் பழைய வேதனை திரும்பி வந்துவிட்டது” என்று ஏக்கத்தோடு முடித்தார். அப்போதும் நான், சென்னை மாகாண அரசின் ஆலோசனையில் இருந்த பகல் உணவுத் திட்டம் பற்றி அவரிடம் பேச்சு மூச்சுவிடவில்லை. “அடுத்த ஆண்டு, நன்கொடைகளை இரட்டிப்பாக்கி, எல்லா ஏழை மாணாக்கருக்கும், உணவு கொடுக்க முடியுமா என்று எண்ணிப் பாருங்க” என்று மட்டுமே என்னால் கூற முடிந்தது. கல்வி வளர்ச்சிக்காக, பிச்சை எடுக்கச் சொல்லிவிட்டு, சாலை வழியாக, மன்னந்தாடி என்ற ஊருக்குப் புறப்பட்டேன். அங்கு போய்ச் சேருவதற்குள் இருட்டிவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/198&oldid=787983" இலிருந்து மீள்விக்கப்பட்டது