உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 நினைவு அலைகள் வழி நெடுகிலும் பெரிந்தல்மண்ணாவில் கண்ட வேதனை தோய்ந்த காட்சிகள் நெஞ்சில் நெருஞ்சிகளாக உறுத்தின. நீண்ட பயணத்திற்குப்பின் களைத்துப் படுத்தபோதிலும் என் து.ாக்கத்தைக் கெடுத்தன. மறுநாள் காலை, சாரணப் பாசறைத் தொடக்க விழாவில் கலந்து கொண்டேன். பின்னர், காரேறி, பாலக்காட்டிற்குப் புறப்பட்டேன். பாலக்காட்டில், பெரியதொரு மண்டபத்தில், ஆண்டு விழா கொண்டாட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் குழுமியிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் ஆசிரியைகள். நான் ஆர்வத்தோடும் அன்புடனும் வரவேற்கப்பட்டேன். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக இருந்தன. மலையாள மொழி தெரியாததால், ஆங்கிலத்தில் ஒரு மணிநேரம் பேசினேன். இல்லை. நெஞ்சின் குமுறல்களைக் கொட்டினேன். 'நிலத்தில் ஈரம் இல்லாமல் எந்தப் பயிராவது இடமுடியுமா? முடியாது.எல்லோர்க்கும் தெரிந்த இந்த அடிப்படை உண்மையை ஏனோ மறந்துவிட்டு பசித்துக் கிடப்போருக்குப் பாடங் கற்பிக்க, முயல்கிறோம்” என்று பீடிகையோடு, பெரிந்தல்மண்ணா நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டினேன். “வீட்டுக்கு வீடு மண் அடுப்பே ஊர் தோறும் ஏழைகளுக்குக் குறைவில்லை. அந்த ஏழைகள், நம்மோடு பிறந்தவர்கள் அல்லவா? அவர்களின் பிள்ளைகள் வாடுவது, நம் பிள்ளைகள் வாடுவதற்கு ஒப்பல்லவா? “பெரிந்தல்மண்ணாவில் நெல் தானம் கொடுத்த நிலமுடையோரைப் போன்று பிற ஊர்களிலும் இருப்பார்கள் அல்லவா? அவர்களை ஊக்குவித்து அவர்களுடைய உதவியைப் பெற்று ஏழைப் பள்ளிப் பிள்ளைகளின் பசிக்குப் பரிகாரம் செய்ய முடியாதா? 'காய்ந்த வயலில் விளைச்சலை அதிகமாக்க என்ன உரம் போடுவது என்ற ஆய்வில் மூழ்கிவிடுவோர் போன்று, எந்தப் பாடங்களை, எந்த நிலையில் எவ்வளவு அதிகமாக்கலாம் என்பதில் கல்வியாளர்களாகிய நாம் காலத்தைப் பாழாக்குவது சரியா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/199&oldid=787984" இலிருந்து மீள்விக்கப்பட்டது