பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 நினைவு அலைகள் 22. எல்லைப் போராட்டம் மொழிவழி மாநிலக் குழுக்களை அமைத்து அவற்றின் பொறுப்பில், இந்திய விடுதலைக்குத் தொண்டாற்றும் முறையைச் கொண்டு வந்து, வேரூன்றச் செய்தது காங்கிரசு ஆகும். அம் மாநில தேசிய உணர்வு, தன்னாட்சி பெற்ற இந்தியாவில் தணிந்துவிடவில்லை; தொடர்ந்து உந்தியது. பொட்டிசீராமுலு என்பவரின் உயிர்த் தியாகத்தால் ஆந்திரத் தனி மாநிலம் அமைக்க நேர்ந்தது. 1953இல் அம் மாநிலம் உருவான செய்தி பிற மொழிவழி மாநிலக் கோரிக்கைகளையும் போராட்டங்களையும் துாண்டிற்று. ஆந்திராவிற்கான நியாயம்தானே, பிற கோரிக்கைகளுக்கும்? எனவே, இந்திய அரசு, நாட்டை மொழிவழி மாநிலங்களாக மாற்றி அமைக்க ஒப்புக் கொள்ள நேர்ந்தது. அப்படி மொழிவழி மாநிலங்கள் அமைக்கையில், எல்லைப் போராட்டங்கள் தலை நீட்டின. எல்லையோரங்களில் இருக்கும் எந்த ஊர், எப் பகுதி, எந்த மாநிலத்தில் இணைவது என்ற கேள்விகள் எழுந்தன. தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில், கேரளாவிற்குப் போவதாக இருந்த 'பீர்மேடு, சேர்த்தலைப் பகுதிகள், தமிழ்நாட்டில் சேர்க்கப்பட வேண்டும் என்று தமிழர்களின் அனைத்து மக்களும் ஒன்றாகக் கருதினார்கள். அப் பகுதிகளில் வாழ்ந்த மக்களில் பெரும்பாலோர் தமிழர்கள் ஆனபடியால், தமிழ்நாட்டோடு சேர்வதே சரி என்பது தமிழர். களின் வாதம். தன்னாட்சி இந்தியா பெற்ற சீதனக் குறைகள் பலவாகும் இவை எல்லா நாடுகளிலும் காணக்கூடியதுதான். இந்தியாவின் தனித்தன்மை என்ன? எந்தக் குறையையும் உரிய நேரத்தில், அதன் தகுதிக்கேற்பக் கவனியாது விட்டுவிடுதல். அதுவே போராட்ட உருவமெடுத்த பிறகே, சில உயிர்களைப் பலி கொண்ட பிறகே, பெரும்பொருள் இழப்பிற்குப் பிறகே, அதைக் கவனிக்கும் போக்கு தனித்தன்மைத் தாம். அது ஆங்கிலேயே ஆட்சி ஆழப் பதித்துவிட்ட பழக்கமாகும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/203&oldid=787988" இலிருந்து மீள்விக்கப்பட்டது