பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணாக்கரின் பசி மயக்கம் 163 “இரண்டொரு அறைகளில் இருந்தவர்கள் - ஆகட்டும் ஐயா!' என்று பணிவோடு கூறினார்கள். "மற்றோர் அறையில் இருந்த மூவரும் பதில் கூறவில்லை. “ஒருவன் கண்ணிர் சிந்துவதைக் கண்டேன். “அவன் தோள்மேல் கையைப் போட்டு என் அறைக்கு அழைத்துச் சென்றேன். 'பகல் சாப்பாடு இல்லை; அதனால் விளையாட முடியவில்லை’ என்று அழுதுகொண்டே அவன் சொன்னான். 'உன் கையில் உணவுப்பெட்டி இருக்கிறதே, அதிலிருந்த உணவு எங்கே? சாப்பிடும்போது குருவிகள் எச்சம் இட்டுவிட்டனவா? விளையாட்டாக எவனாவது தட்டிவிட்டானா?” என்று கேள்விகளை அடுக்கினேன். ‘நான் உணவு கொண்டுவர, வீட்டில் இருந்தால்தானே! என்னுடன் படிப்போர் கேலி செய்வார்களென்று அஞ்சி நானும் காலி உணவுப் பெட்டியோடு வருகிறேன்’ என்றான், மானக்கன். “காதும் காதும் வைத்தாற்போல், வெளியே இருந்து வந்து படிப்போரிடம் புலன்விசாரனை செய்தேன். “பதினைந்து பேர்கள் இப்படியே காலி உணவுப் பெட்டியோடு வருவதும் பகல் முழுவதும் பட்டினியாகக் கிடப்பதும் தெரிய வந்தது. “பெரும்பாலான மாணாக்கர், இங்கே, விடுதியிலே இருக்கிறார்கள். அவர்களோடு இதுபற்றி உரையாடினேன். "அவர்கள் தங்கள் செலவில் தாங்கள் சாப்பிடும்போது, சகமாணவர்களுக்குப் பகல் சாப்பாடு போட ஒப்புக்கொண்டார்கள். அப்படியே நடக்கிறது. ‘விடுதி மாணாக்கரின் பெற்றோர்களும் இச் சுமையைப் பற்றி முணுமுணுக்கவில்லை. “பரவலான பட்டினி நோய்க்கு மருத்துவம் பார்த்தால்தான், கல்வியின் தரம் உயரும்” என்றார். பலரிடமிருந்து கிடைத்த தகவல்களால், நான் ஏதோவொரு பொய் மானைத் தேடவில்லை என்பது புலப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/202&oldid=787987" இலிருந்து மீள்விக்கப்பட்டது