பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 நினைவு அலைகள் அவற்றில் இரண்டை உங்களோடு பகிர்ந்து கொள்ளுகிறேன். சென்னையில் சிறப்பாக நடந்துவரும் ஒர் உயர்நிலைப் பள்ளியின் தாளாளர், 'அய்யா வீட்டுக்கு வீடு மண் அடுப்பே. சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள். பள்ளிக்கூடத்தில்கூட, பல மாணாக்கர்களுக்குப் பகல் உணவு இல்லை என்பது தெரிய வந்தது. இரக்க மனமுடைய சில பெரியவர்களின் பொருள் உதவியால், சில ஆண்டுகளாக நாற்பது அய்ம்பது பேர்களுக்கு நாங்கள் பகல் உணவுக்கு ஏற்பாடு செய்து உள்ளோம். "இந்த அன்னதானம் எல்லாப் பள்ளி நாள்களிலும் செய்கிறோம். 'ஏழை மாணாக்கரின் பட்டினி நிலைபற்றிப் பொது மக்களின் கவனத்தை ஈர்த்ததற்காகத் தங்களுக்கு நன்றி செலுத்துகிறோம்” என்றார். சென்னை நகரின் சாந்திநிகேதன்’ என்று கருதுவதற்குத் தகுதியுடைய மற்றோர் உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் எனக்கு மிகவும் வேண்டியவர். அவர் என்னைத் தொலைபேசியில் கூப்பிட்டார். சமுதாயத்தில் பலர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, பட்டினி கிடப்பதைத் தன் நேரடிப் பட்டறிவால் அண்மையில் தெரிந்து கொண்டதாக என்னிடம் கூறினார். “எங்கள் பள்ளி உறையுள் பள்ளி என்பது உங்களுக்குத் தெரியும். இருப்பினும் பள்ளியைச் சுற்றியுள்ள சிலருக்கு மட்டும் தத்தம் வீட்டிலிருந்து வந்து படித்துப் போக உரிமை தந்துள்ளோம். பள்ளிக்கூடம் அமைதியாகவும் ஒழுங்காகவும் நடந்து வந்தது. "ஓர் நாள் பகல் இடைவேளை, தலைமை ஆசிரியரைக் காணப் பள்ளி வளாகத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தேன். “எதிர்பார்க்கக்கூடியபடி பல மாணவ, மாணவிகள் மா நிழல்களில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். "ஆனால், சில வகுப்பறைகளில் மட்டும் சிலர் உட்கார்ந்து இருந்தது என் கண்களில் பட்டது. இரண்டொரு அறைக்குள் துழைந்தேன். வெளியே காற்றோட்டமாக விளையாடலாமே?’ என்று கேட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/201&oldid=787986" இலிருந்து மீள்விக்கப்பட்டது