பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 நினைவு அலைகள் ஒன்றிணைந்து போராட, நாள் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். “இது எதிர்பார்க்கக்கூடியதே. இம் முறை, மாணவர்களைத் தனியாகப் பிரித்துக் காட்டி வேலை நிறுத்தம் செய்யும்படி சொல்லியிருக்கிறார்கள். "அது நிலைமையைச் சிக்கலாக்கும். நீங் நடக்கவிருக்கம் வேலை நிறுத்தத்தை எப்படிச் சமாளிப்பது என்று முடிவு எடுக்குமுன், உங்கள் யோசனைகளைக் கேட்கவே உங்களை அழைத்திருக்கிறேன். என்ன செய்யலாம் சொல்லுங்கள்” என்று, மாநிலக் காவல்துறைத் தலைவர் திரு. அருளைப் பார்த்து முதலமைச்சர் கேட்டார். எப்போதுமே பொது வேலை நிறுத்தங்களை ஏற்பாடு செய்பவர்களால் ஏற்படும் தொல்லையைவிட, ஊருக்கு ஊர் இருக்கும் சமூக விரோதிகள், போராட்டக்காரர்களோடு கலந்து வன்முறைகளையும் கலவரங்களையும் தொடங்குவதாலேதான் அதிகத் தொல்லைகள் ஏற்படுகின்றன. “குறிப்பிட்ட நாளைக்கு இரண்டொரு நாள் இருக்கையிலேயே, ஆங்காங்குள்ள குண்டர்களைப் பிடித்து, மூன்று நான்கு நாள்கள் காவலில் வைத்துவிட்டால், அவர்களால் விளையக்கூடிய தீங்குகளைப் போக்கிவிடலாம். "@മ முறை மாணாக்கரும் வேலை நிறுத்தத்தில் சேர்ந்தால், அது பெருந் தொல்லையாகிவிடும். இளங்கன்று பயமறியாது. மாணாக்கர் எப்போது என்ன செய்வார்கள் என்று சொல்ல முடியாது. "அதே நேரத்தில், மற்றவர்களை அடக்குவதுபோல், அவர்கள் மேல், அடி உதை அடக்குமுறையைத் திருப்புவது எங்கே போய் விடும் என்று, சொல்ல முடியாது. “பொதுக்கல்வி இயக்குநர் இங்கே இருக்கிறார்.அவர் ஏதாவது உபாயங்கண்டு பிடித்து, மாணாக்கர் அன்று பொதுமக்களோடு, சேராதபடி பிரித்துவிட முடியுமானால், பொதுமக்களை நாங்கள் எளிதாகச் சமாளித்துவிடுவோம்” என்று காவல் துறைத் தலைவர் தம் உரையை முடித்தார். முதலமைச்சர் காமராசர் என்னைப் பார்த்து, 'நீங்கள் என்ன யோசனை சொல்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/205&oldid=787990" இலிருந்து மீள்விக்கப்பட்டது