பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லைப் போராட்டம் 167 "ஐயா! வேலை நிறுத்தங்களில் ஈடுபடாமலும் துண்டி விடாமலும் வளர்ந்துவிட்ட எனக்கு, சமாளிக்க வேண்டும் என்பது மட்டுமே தோன்றுகிறது. எப்படி என்று புலப்படவில்லை? "ஐயா மனத்தில் இருப்பதைச் சொன்னால், அவ்வழி எவ்வளவு பயன்படும் என்று பார்க்கலாம்” என்று பணிவோடு பதில் உரைத்தேன். “மொழிவழி மாநிலக் கொள்கையை ஏற்றுக் கொண்டபின், எல்லைப் பகுதிகளில் எம் மொழியினர் பெரும்பாலோராக உள்ளனரோ அதற்கேற்ப, அவர்களைச் சேர்த்துவிடுவதே முறை. "மாணாக்கர் போராட்டத்தில் ஈடுபட்டால், நிலைமை கட்டுக்கு அடங்காமற் போய்விடலாம். “எனவே, அவர்கள் போராட்டத்தில் பங்கு கொள்ளாமல் செய்ய வேண்டும். “அதற்கு இப்படிச் செய்தால், பலிக்குமா? யோசித்துச் சொல்லுங்கள்.” “உடனே, ஒவ்வோரு மாவட்டத்திற்கும் சென்று, கல்லூரி முதல்வர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் ஆகியோரைக் கூட்டிப் பேசுங்கள். “இந்த விவகாரம் பற்றி அவர்கள் எத்தகைய கருத்தும் கொள்ள உரிமை உடையவர்கள். "அக் கருத்தை அறிந்துகொள்ள முயற்சிக்காதீர்கள். அவர்கள் கருத்துகளை அறிய அவர்களை அழைக்கவில்லை என்று முதலில் அறிவித்துவிடுங்கள். “பிறகு, அவர்களிடம் வேலை நிறுத்தத்தை எப்படியும் தடுக்கவேண்டும் என்று ஆணையிடாதீர்கள். “முதல்வர்களிலும் தலைமையாசிரியர்களிலும் பலர், மலையாளிகள். "அவர்களுக்குக் கேரளாவின்பால் பரிவு இருந்தால், கோபித்துக் கொள்வதற்கு இல்லை. அதனால், அவர்களிடம் மூன்று மாற்றுக் கருத்துகளைக் கூறுங்கள். "உடம்பிற்குப் பிடிக்கும் மருந்து கொடுப்பதுபோல், ஆங்காங்கே உள்ள சூழலுக்கு ஏற்ற மாற்று முறைகளை அவர்கள் பின்பற்றட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/206&oldid=787991" இலிருந்து மீள்விக்கப்பட்டது