பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 நினைவு அலைகள் “காலையில் வகுப்புகளுக்குச் செல்லுமுன் மாணவர் அனைவரும் கூடும் மரபு உடைய கல்வி நிலையங்களில், மாணவர் அவையில் - 'எல்லை போராட்டத்தைப் பெரியவர்களிடம் விட்டுவிட்டு, நீங்கள் விலகி இருந்தால், அவர்கள் அமைதியாக அதை நடத்த முடியும். ஆகவே, பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளாதீர்கள் என்று சில நாள்கள் சொல்லிப் பார்க்கட்டும். “மாணவர் அவைகூடாத கல்வி நிலையங்களில் மாணவர் தலைவர்களைக் கூட்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட வேண்டாமென்று அறிவுர்ை கூறட்டும். “இவ்வறிவுரையைத் தொடர்ந்து சில நாள்கள் கூறட்டும்: எப்படி ஏற்கிறார்கள் என்பதைக் கவனிக்கட்டும். “மாணவர்கள் அவ் வழியை ஏற்கமாட்டார்கள் என்று தோன்றினால், போராட்டத்திற்கு இரண்டொரு நாள் இருக்கையில், வேலை நிறுத்தம் செய்யாது கற்க வாருங்கள். வகுப்புகள் தொடங்கும்முன், எல்லோருமாகக் கூடி, கோரிக்கையை ஆதரித்துத் தீர்மானம் போட்டு, அரசுக்கு அனுப்புவோம்’ என்று தலைவர்கள் சொல்லிப் பார்க்கட்டும். “அதற்கும் இசையவில்லை என்றால், முதல்வர்களும் தலைமையாசிரியர்களுமே முன்வந்து, குறிப்பிட்ட நாள் நீங்கள் வராமற்போனால், பரவாயில்லை. அன்று வீட்டோடு இருந்து விடுங்கள், மக்களோடு கலந்து குண்டர்கள் செய்யும் கலவரங்களுக்கு நீங்கள் பழி ஏற்கும் நிலைக்கு ஆளாகிவிடாதீர்கள் என்று அறிவுறுத்தட்டும். -- “இது கடைசி பட்ச யோசனை! இவற்றால் பலன் இருக்குமா?” என்று என்னைக் கேட்டார் காமராசர். 'அய்யா, நன்றாகப் பலிக்கும் என்று தோன்றுகிறது. சிறு விண்ணப்பம். “எந்த ஊரிலாவது, எந்த முதல்வரோ, தலைமையாசிரியரோ இரண்டாம் வழியையோ, மூன்றாம் வழியையோ மேற்கொள்ள வேண்டியிருந்தால், உள்ளுர் காவல்துறை, இன்னார் தூண்டிவிட்டார் என்று எழுதினாலும் அரசு அவர்கள் பேரில் நடவடிக்கை எடுக்காதென்ற நம்பிக்கை உண்டானால், துணிந்து பலனுள்ள வகையில் செயல்பட இயலும்” என்று சொன்னேன். “ஐ. ஜி. இதைக் குறித்துக் கொள்ளுங்கள் செயலரும் குறித்துக் கொள்ளட்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/207&oldid=787992" இலிருந்து மீள்விக்கப்பட்டது