உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லைப் போராட்டம் 159 “கல்லூரி முதல்வரோ, தலைமை ஆசிரியரோ, பிற ஆசிரியர்களோ தூண்டிவிட்டதாக அறிக்கை வந்தால், அதன்மேல் நடவடிக்கை எடுக்க வேண்டாம். இந்த உறுதிபாட்டின் பேரில் இயக்குநர் இயங்கலாம்” என்று முதலமைச்சர் ஆணையிட்டார். "இயக்குநர் பொறுப்பைப் பங்கிட்டுக் கொண்டதால், எங்கள் வேலை எளிதாகிவிட்டது” என்று காவல்துறைத் தலைவர் கூறினார். முதல்வர் கூறிய உபாயத்தை அமைச்சர்கள் வரவேற்றார்கள். காமராசரின் விவேகத்தை வியந்தபடியே விடை பெற்றுக்கொண்டேன்; விரைந்து செயல்பட்டேன். முதலில் சென்னை மாநகரக் கல்லூரிகள், உயர்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றின் கூட்டத்தைக் கூட்டினேன். கோட்டையில் நடந்த உரையாடலையும் முடிவுகளையும் எடுத்துரைத்தேன். ‘மாணவர்களைக் கல்வி நிலையத் தலைவர்களின் கட்டுப்பாட்டில் வைக்க முடியுமா?’ என்று சிந்தியுங்கள்; மாற்று முறைகளில் எதை நிறைவேற்ற முடியும் என்று மனந்திறந்து பேசுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். + “கல்வித்துறை வரலாற்றிலேயே, இப்போதுதான், இப்படி எங்களிடம் நம்பிக்கை வைத்து, எங்களையும் கலந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ■ “நாங்கள் ஒரடி உயர்ந்துவிட்டதாக உணர்கிறோம். அநேகமாக, முதல்வழியையே பின்பற்ற வைப்போம். "எங்கோ ஓரிடத்தில் இரண்டாம் வழி தேவைப்பட்டர்ல் பொறுத்துக்கொள்ளுங்கள். எங்கும் மாணாக்கர் பொதுமக்களோடு கலந்ததால், வன்முறை வெடித்தது என்னும் நிலைமை உருவாகாமல் பார்த்துக் கொள்ளுகிறோம்” இது கலந்துரையாடலின் இறுதியில் கிடைத்த முடிவு. முதல்கூட்டம் என் நம்பிக்கையை உறுதிப்படுத்தியது ஒரு வாரத்திற்கு மேலாக இதே வேலையாக ........ மாவட்டங்களுக்கும் சென்றேன்; ஆங்காங்கே, கல்வி நிலையத் தலைவர்களைக் கூட்டி உரையாடினேன். சென்னைக் கல்வியாளர்களிடம் கண்ட அளவிலும் தன்மையிலும் மற்ற மாவட்டத் தலைவர்களிடமும் பெருமிதம் நம்பிக்கை, ஈடுபாடு, பொறுப்பு ஆகியவை கொப்பளிக்கக் கண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/208&oldid=787993" இலிருந்து மீள்விக்கப்பட்டது