பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TZ2 நினைவு அலைகள் “ஒவ்வோர் ஊர் விவகாரத்திற்கும் மாணாக்கரை இழுப்பதா? ஆகாது; ஒவ்வொரு கிளர்ச்சிக்கும் படிக்கும் இளைஞர்க்ளை மாணவிகளைத் தள்ளிவிடலாமா? கூடாது! “என் நிர்வாகத்தின் வசதிக்காக இப்படிச் சொல்வதாக நினைத்துவிடாதீர்கள் என்று வேண்டிக் கொள்ளுகிறேன். "பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய விதை நெல்லை, திடீர்த் தேவைகளுக்குச் செலவிட்டுவிடலாமா? கூடாது என்பது நீங்கள் அறிந்தது அல்லவா? “நம் சங்க இலக்கியம், புறநானூறு வீரத்தை மட்டுமா காட்டுகிறது? 'விவேகத்தையும் காட்டுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். "தமிழ்த்தாய், தன் மைந்தனின் கையில் போர்வாளை ஈந்து, போர்க்களம் செல்ல விடுத்தது எப்போது, என்பதைச் சிந்தியுங்கள்! "குடும்பத்தில் வயது வந்தவர்கள் எவரும் இல்லாத நிலையில்தான், இளங்குருத்தைப் போர்க்களம் அனுப்பினாள். "அத்தகைய விவேகம் நமக்கு வரவேண்டாமா? "பொது விவகாரங்களை - பொதுக் கிளர்ச்சிகளை - முதிர்ச்சியுடைய நாம் ஏற்றுச் சமாளிப்பதே சரி. "எவ்வளவு உணர்ச்சியான கிளர்ச்சிக்கும் மாணவர்களைத் தள்ளிவிடாதீர்கள். "நீங்கள் அவர்களை இழுக்காமல், நோன்பு இருப்பது மட்டும் போதாது. “நம் நாட்டு அரசியல் கட்சிகளும் புறநானூற்று விவேக வழியைப் பின்பற்றும்படி செய்யுங்கள். “அதற்கு உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துங்கள். A -- “அரசியல்வாதிகளிடையே, தொழில் அதிபர்கள் பெற்று இருக்கும் செல்வாக்கு மிகப்பெரியது. "சொத்துடைய பொறுப்புடைய குடிமக்கள் என்ற முறையில், நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சியைச் சேர்ந்திருப்பது இயற்கை. “தேர்தல் போன்ற பொது நடவடிக்கைகள் வரும்போது கட்சிகள் என்ன செய்கின்றன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/211&oldid=787996" இலிருந்து மீள்விக்கப்பட்டது