பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லைப் போராட்டம் 173 “உங்களை அணுகுகின்றன? "நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்கள் கட்சிக்கு நிறைய அரசியல் நிதி உதவுகிறீர்கள். == “மற்ற கட்சிகளுக்குக் கைவிரித்து விடுகிறவர், இரண்டொருவர் இருப்பாரா என்பதே ஐயப்பாடு! “வேண்டியவர்களுக்கு நிறையக் கொடுக்கிற நீங்கள், மற்றவர். களுக்கு மறுக்காமல் சிறு தொகையாவது கொடுத்து அனுப்புகிறீர்கள். “இனி அப்படி உதவி செய்கையில், மாணவர்களை ஏன் போராட்டங்களில் தள்ளிவிடுகிறீர்கள்? இனியாவது, போராட்டங்கள் நம்மைப் போன்ற வயது வந்தோரோடு நிற்கட்டும், என்று அவர்களுக்குச் சாடை காட்டுங்கள். “அடுத்தடுத்து, பலரும் அப்படிச் சொன்னால்,மெல்ல அந் நோன்பினை மேற்கொள்ள வருவார்கள். “கண்கள் காணும் கருவிகள், காதுகள் கேட்கும் உறுப்புகள் அவை வேறு வேலைகளைச் செய்வதில்லை. “மாணவப் பருவம், ஆயத்தப் பருவம் அந்தப் பருவத்தில் கற்று, கேட்டு, சிந்தித்து, தெளிந்து, வாழ்க்கைக்கு ஆயத்தமாவதே முதற்கடமை செய்ய வேண்டிய ஒரே கடமை. “பக்கச்சொல் பதினாயிரம் பெறும் என்பார்கள். மாணவர்களை, மாணவர்களாகவே செயல்படவிடுங்கள்! “செயல்படத் துரண்டுங்கள் என்று நீங்கள், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கூறுவீர்களானால், கல்விக்கு ஆதரவான சூழ்நிலை உருவாவது உறுதி. - “கல்விக்காகச் செலவாகும் பணம் முழுவதும் நம்முடையதே! “பிற ஈடுபாடுகள் காரணமாக, தேர்ச்சியில் தவறிவிடும் மாணாக்கர், தனது காலத்தைப் பாழாக்குவதோடு நாட்டின் நிதியையும் பாழாக்குகிறார். “எனவே, மாணவர்களைப் போராட்டங்களுக்கு இழுக்காது நோன்பு பற்றி ஆழச் சிந்தியுங்கள். -- "சரியென்று பட்டால் உளமார் ஏற்றுக் கொள்ளுங்கள். “ஏற்புடையதாயின், செயலுருவம் கொடுக்கப் பெருந்துணை புரியுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/212&oldid=787997" இலிருந்து மீள்விக்கப்பட்டது