பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iWo; நினைவு அலைகள் உள்ளத்தின் உண்மை ஒலியை வெளிப்படுத்தியதால் என் பேச்சு எடுப்பாக இருந்ததாகப் பலர் பாராட்டினர். எனது பேச்சிற்கு முக்கியத்துவம் கொடுத்து,சில நாளிதழ்கள், கண்ணில்படும் வண்ணம் அதை வெளியிட்டன. பலன் இருந்ததா? இருந்தது. எவ்வகையில்? குறிப்பிட்ட நாள் அன்று, மாநிலம் தழுவிய கவன ஈர்ப்புக் கிளர்ச்சி வெற்றிகரமாக நடந்தது. ஆனால், மாணவ சமுதாயம் அதில் கலந்துகொள்ளாமல். ஒதுங்கி நின்றது! இதை, கிளர்ச்சித் தலைவர்களே சுட்டிக் காட்டினார்கள். 23. தமிழ்ப் பயிற்சி மொழித் திட்டம் கல்வி அமைச்சரின் பாராட்டு “மாணவர்கள் மாணவர்களாகவே இயங்கட்டும். அவர்களைப் பொதுக் கிளர்ச்சிகள் என்னும் காட்டாற்று வெள்ளத்தில் தள்ளிவிடாதீர்கள்” என்ற கருத்தைப் பொது வேலைநிறுத்தம் அறிவித்த பிறகு சொல்லி இருந்தால், அதை ஏற்று இருக்கமாட்டார்கள். நான், பொதுக்கல்வி இயக்குநராகப் பதவி உயர்வு பெறுவதற்கு முன்பே, இந்தக் கருத்தினைப் பள்ளி விழாக்களில் சொல்லி வந்தேன். பொதுக்கல்வி இயக்குநரான பிறகு, நாள்தோறும் ஏதாவதொரு நிகழ்ச்சியில் இக் கொள்கையைப் பரப்பி வந்தேன். எனவே, என் கொள்கை சந்தர்ப்ப வாதமாகப்படவில்லை. என் கோவைப் பேச்சைப் படித்த, கல்வி அமைச்சர் மாண்புமிகு சி. சுப்பிரமணியம் என்னைப் பாராட்டினார். நான் தமிழ்நாட்டுக் கல்வித்துறையில் வெற்றிகரமாகப் பெருமளவு சாதிக்க முடிந்ததற்குக் காரணம் - முதற் காரணம் - முதலமைச்சர் காமராசரோ, கல்வி அமைச்சர் சுப்பிரமணியமோ என்பால் அழுக்காறு கொள்ளாமையே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/213&oldid=787998" இலிருந்து மீள்விக்கப்பட்டது