பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் பயிற்சி மொழித் திட்டம் 175 'தங்கள் புகழுக்குப் போட்டியாக வரும் ஒருவன் நெ. து. சு.” என்று அவர்கள் நினைத்ததே இல்லை. என் இயல்பு மாறாக 'முடிவு எடுக்குமுன் தலைமையோடு வாதாடுவான். முடிவு எடுத்தபின், தன் கருத்திற்கு மாறுபட்ட முடிவையும் முணுமுணுக்காமல் நிறைவேற்றும் நேர்மையாளன்’ என்று என்னை எடைபோட்டு வைத்திருந்தனர். அவர்கள் என்பால் கொண்டிருந்த நம்பிக்கை என் ஆற்றலைப் பெருக்கிற்று. எந்த அளவு நம்பிக்கை? முழு அளவு நம்பிக்கை! ஆங்கில ஆதிக்கம் தாய்மொழி, பயிற்றுமொழி என்பது இயற்கைக் கல்வி இயல். ஆங்கிலம் போன்ற அயல் மொழி வாயிலாகப் பயில்வது தொல்லை. அத் தொல்லையை இந்தியர் எப்போது, ஏன் ஏற்றுக் கொண்டார்கள்? ஆங்கிலேயே ஆட்சியின்போது ஏற்றுக் கொண்டார்கள். அரசு ஊழியமும் 'கும்பெனி’ப் பதவிகளும் நல்ல ஆதாயமானவை! அந்த நாளில் பெருமை உடையன! அவற்றால் ஈர்க்கப்பட்டு, அயல்மொழியாம் ஆங்கிலத்தின் வாயிலாகக் கற்கத் தலைப்பட்டோம். பெரிதும் நிந்திக்கப்பட்ட ஆங்கிலேயர் கூடச் செய்யத் துணியாத தீங்கு ஒன்று, தன்னாட்சி இந்தியாவில் - தமிழுக்கு உயிர்’ என்று முழங்கும் தமிழகத்தில் பரவியுள்ளது! ஆங்கிலேயர் காலத்தில், ஒன்பதாம் வகுப்பு - நான்காவது படிவம் - முதல்தான் ஆங்கிலத்தில் கற்க முடியும். இப்போது மழலைப் பள்ளி முதல் அயல்மொழி வாயிலாகக் கல்வி - எதிர் நீச்சல் கல்வி பரவியுள்ளது. தொடர்ந்து பரவியபடியே உள்ளது. சி.சுப்பிரமணியத்தின் முயற்சி தமிழுக்கு 'அரியாசனம் பெற்றுத் தருவதை நோக்கமாகக் கொண்ட வன மலர்ச்சங்க முன்னோடியான சி. சுப்பிரமணியம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/214&oldid=787999" இலிருந்து மீள்விக்கப்பட்டது