உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

175– நினைவு அலைகள் தமிழ் வழி கல்லூரிக் கல்வி தரும் வாய்ப்புகளை ஏற்படுத்த முயன்றார். ஏற்கெனவே, அவினாசிலிங்கனார் அமைச்சராக இருந்தபோது, கோவை அரசினர் கல்லூரியிலும் சேலம் நகராட்சிக் கல்லூரியிலும் ஒவ்வோர் பாடத்தைத் தமிழ் வழி கற்பிக்க ஆணையிட்டதும் அது ஒராண்டில் பட்டுப் போனதும் சி சு. வின் நினைவிற்கு வந்ததுபோலும். அவர், பரவலான பொது மக்கள் சிந்தனையைத் துண்டி, தமிழ் வழிக் கல்விக்கு ஆதரவைத் திரட்ட முயன்றார். 1955ஆம் ஆண்டு ஜூன் திங்களில், சென்னை மாநிலக் கல்லூரியில், கல்லூரி முதல்வர்கள் மாநாட்டைக் கூட்டும்படி எனக்கு ஆணையிட்டார். அதற்கு நாளும் நேரமும் குறிப்பிட்டார். இலட்சுமணசாமி முதலியாரின் தலையீடு சுற்றறிக்கை போவதற்கு முன்பு, சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர், டாக்டர் ஆ. இலட்சுமணசாமி முதலியார் இதில் தலையிட்டார். அத்தகைய ஆலோசனைக் கூட்டத்தை தாமே, துணைவேந்தர் என்ற முறையில் கூட்ட முன்வருவதாகவும், அதற்கான செலவை அரசு ஏற்றுக்கொள்ளட்டும் என்றும் இலட்சுமணசாமி முதலியார் கல்வி அமைச்சரிடம் கூறினார். கல்விஅமைச்சர், பல்கலைக் கழகத்தின் இணை, வேந்தரானதால் அவரும் அந்த யோசனைக்கு இசைந்தார். கல்லூரி மட்டத்தில் தமிழைப் பயிற்று மொழியாக்குவது பற்றி ஆலோசிக்கும் நோக்கத்தோடு, கல்லூரி முதல்வர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. அதோடு பொதுமக்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் சார்பில், திருவாளர்கள் கி. வா. ஜகந்நாதன், ஏ. ஜி. வெங்கடாச்சாரி, குத்துளசி குருசாமி, ப. ஜீவானந்தம் முதலிய அறிஞர் பெருமக்களும் அக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டார்கள். 1955ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தில் இரண்டே இரண்டு பல்கலைக் கழகங்களே இருந்தன. அண்ணாமலை பல்கலைக் கழகம் இரண்டாவது கழகமாகும். அதன் அப்போதைய துணைவேந்தர் திருவாளர் டி. எம். நாராயணசாமி பிள்ளை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/215&oldid=788000" இலிருந்து மீள்விக்கப்பட்டது