பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் பயிற்சி மொழித் திட்டம் TZ அவரும் இந்தக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தார். இணைவேந்தரும் கல்வி அமைச்சருமான சி. சுப்பிரமணியம் அக் கூட்டத்தைத் தொடங்கி வைப்பாரென்பதும் டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் தலைமை ஏற்பாரென்பதும் முடிவு செய்யப்பட்டது. நேரங்காத்தலில் புகழ் பெற்றவர்கள் சி. சுப்பிரமணியமும் ஆ. இலட்சுமணசாமியும். எனவே, குறித்த நாளன்று குறித்த நேரத்தில் அச் சிறப்புக் கூட்டம் தொடங்கியது. -- கல்வி அமைச்சர், தாய்மொழி வாயிலாகக் கல்வி கற்பதன் சிறப்பையும் இயற்கையையும் விளக்கம் அரிய தொடக்கவுரை ஆற்றினார். தமிழுக்கு ஆதரவாகப் பேசினார் பிறகு தலைமை தாங்கிய டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் அருமையான ஆங்கில உரை ஆற்றினார். “சென்னைப் பல்கலைக் கழகம் ஆங்கிலப் பயிற்று மொழிக்கு அடிமை, தாய்மொழி வாயிலாகக் கற்பிப்பதற்குப் பகை' என்பது ஆதாரமற்ற கருத்தாகும். “இந்த நூற்றாண்டின் நாற்பதுகளின் தொடக்கத்திலேயே, எனது பெருமதிப்பிற்குரிய நண்பர் சத்தியமூர்த்தி அவர்கள் முன்மொழிய, சென்னைப் பல்கலைக் கழகப் பேரவை ஒருமனதாக ஏற்றுக் கொண்டுள்ள - இதுவரை மாற்றப்படாத - முடிவு ஒன்றை உங்கள் நினைவிற்குக் கொண்டு வருகிறேன். "அம்முடிவு என்ன? “தக்க ஏற்பாடுகள் செய்யக்கூடிய கல்லூரிகளில் 'தாய்மொழி வாயிலாகக் கற்பிக்க உரிமை கொடுக்கலாம் என்பது. “சென்னைப் பல்கலைக் கழகம் தன் கதவைத் திறந்து வைத்துள்ளது. "தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்க இன்னின்ன நூல்களை ஆயத்தம் செய்துவிட்டோம்; தமிழில் கற்பிக்கப் போகும் பேராசிரியர்களின் தகுதிகள், தமிழாற்றல் ஆகியவை பற்றித் தகவல் கிடைத்தால், பல்கலைக் கழகம் ஆவன செய்யும்” என்பது முதலியாரின் நீண்ட ஆங்கில உரையின் சுருக்கமாகும். “ஒரு மாமாங்க காலம் ஆகியும், சென்னைப் பல்கலைக் கழகம் வாளா இருக்கிறதே! இது தமிழ்நாட்டு நிதியில் இருந்து நடப்பதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/216&oldid=788001" இலிருந்து மீள்விக்கப்பட்டது