பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 நினைவு அலைகள் வேறு நாட்டுப் பணத்தில் நடப்பதா?” என்று என் காதில் ஊதினார் ஒருவர். அது கிடக்கட்டும். முறைப்படி முன்னுரை கூறியபின் தலைவர், கல்வி அமைச்சர் மற்றும் அவையோரின் கருத்துகளைக் கேட்டார். அந்தக் கால கட்டத்தில், அரசினர் கல்லூரிகள் வெகு சிலவே இருந்தன; தனியார் கல்லூரிகளோ மிகப் பலவாகும். தனியார் கல்லூரி முதல்வர் ஒருவர், கலந்துரையாடலைத் தொடங்கி வைத்தார். பிறகு சில முதல்வர்கள், அப்புறம் சிலர் பொதுமக்கள் சார்பில் தங்கள் கருத்துகளைக் கூறினார்கள். பெரும்பாலோர், தமிழ்ப் பயிற்று மொழியை ஆதரித்தார்கள். தமிழ்ப் பயிற்று மொழியாகக் கொள்வதற்கு முன்னதாக, தமிழில் தக்க பாடநூல்களை எழுதி வெளியிட்டுப் பல்கலைக் கழக ஒப்புதல் முத்திரை பெறவேண்டும். சொல்லிக் கொடுக்கப்போகும் பேராசிரியர்களுக்குப் பணிப் பயிற்சி கொடுக்கவேண்டும் என்பதில் ஒருமைப்பாடு இருந்தது எனலாம். அண்ணாமலை பல்கலைக் கழகத் துணைவேந்தர் நாராயணசாமி பிள்ளை பேசினார். தமிழின் சிறப்பையும் பெருமையையும் நினைவுபடுத்தினார். காந்தியடிகள் முதல் பல தலைவர்களும் தாய்மொழிக் கல்வியை ஆதரிப்பதைப் படம் பிடித்துக் காட்டினார். பகடையை உருட்டினார் "தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்க அண்ணாமலை பல்கலைக் கழகம் துணைபுரியும்.” “இந்த அடிப்படைக் கொள்கை எல்லோரும் ஏற்றுக் கொள்வதே. இதையும் அதையும் செய்யுங்கள் என்று கூறியதை ஆதரித்தார். “எவரும் குறுக்கே நிற்பதாகக் கொள்ள வேண்டாம். நாங்களும் உங்களோடு வருகிறோம். நாங்களும் ஒத்துழைப்புத் தருகிறோம். “எந்த ஏற்பாடுகள் செய்வதானாலும் இரு பல்கலைக் கழகத் துணைவேந்தர்களையும் இணைத்துக்கொண்டு இத் துறையில் முன்னேறுங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/217&oldid=788002" இலிருந்து மீள்விக்கப்பட்டது