பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் பயிற்சி மொழித் திட்டம் - 179 "தாய்மொழி வாயிலாகக் கல்வி என்ற கொள்கையை நிறைவேற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் திட்டமிட, ஒரு குழுவை அமைப்பது நல்லதென்று தோன்றுகிறது.” - இப்படி ஒரு பகடையை உருட்டினார். அக் கூட்டம் இரு வேளையும் நடந்தது. இடைவேளையில் பல்கலைக் கழக வளாகத்தில் பகலுணவு பரிமாறப்பட்டது. கல்வி அமைச்சர், நாராயணசாமி பிள்ளை கூறிய 'குழு அமைப்பு ஆலோசனை’ பற்றி என்ன நினைக்கிறார் என்று என்னிடம் சொல்லவில்லை. இறுதிக் கட்டத்தில், அதை ஏற்றுக் கொள்ளலாமென்று கல்வி அமைச்சரே முன் வந்து கூறினார். துணைவேந்தர் இருவரும் வெற்றிக் களிப்பைத் திறமையாக அடக்கிக் கொண்டார்கள். பழமை விரும்பிகளுக்குக் குளிர் பாதாம் பாயசம்' பரிமாறினது போல் இனிமையாக இருந்தது. கமிழ் தோற்றுவிட்டது ஊழியனாகிய எனக்கு ஒரே எரிச்சல் தமிழ் தோற்றுவிட்டது போன்ற உணர்வு என்னுள் பொங்கிற்று. என்னை அமைதிப்படுத்திக் கொள்வதற்கு முன்பாக, தலைவர் முதலியார் என்னை அழைத்தார். எதற்கு? நன்றி கூற அழைத்தார். படபடப்போடு எழுந்து, தலைவர் மேசை அருகே சென்றேன். "இன்று இரு இராஜதந்திரிகளின் மகத்தான திறமையை உணரும் நல்ல வாய்ப்பினைப் பெற்றோம். 'டாக்டர் முதலியார், உலக அவைகளைச் சமாளித்தவர். துறதய விடுதலைப் போராட்டத் தலைவராகிய திரு. சத்தியமூர்த்தி தீர்மானத்தை நினைவுபடுத்தி மயக்கிவிட்டார். "திருவாளர் நாராயணசாமிப் பிள்ளை அவர்களும் தாய்நாட்டு அரங்குகள் பலவற்றைக் கண்டு வென்றவர். "அவர், நாங்களும் வருகிறோம். எங்களையும் அழைத்துப் போங்கள் என்று கேட்டுக் கொண்டார். “இதன் பொருள் என்ன? எவ்வளவு விரைவாகச் செயல்படுத்துவது என்பது நம் மூத்தோரின் கைகளில் இருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/218&oldid=788003" இலிருந்து மீள்விக்கப்பட்டது