உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

TBO நினைவு அலைகள் "அவர்கள், மெல்ல மெல்ல என்று தடுக்காமல், அடுத்து, அடுத்து என்று முடுக்கிக் கொண்டே வரும்படி, பணிந்து வேண்டிக் கொள்ளுகிறேன்” என்று கூறிவிட்டு, வந்திருந்தவர்களுக்கு நன்றி கூறி முடித்தேன். ப. ஜீவானந்தம் பாராட்டினார் மண்டபத்தைவிட்டு வெளியேறும்போது, ப. ஜீவானந்தம் என்னிடம் விரைந்து வந்தார்; என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். “சொல்ல வேண்டியதைச் சொல்ல வேண்டிய நேரத்தில் துணிந்துசொல்லிவிட்டீர்கள். இதுவே நமக்குள்ள தனித்தன்மை. என் பாராட்டுகள்” என்றார். பிறகு வேறு சிலரும் என்னைப் புகழ்ந்து பாராட்டினார்கள். என்னுடைய இழப்பு உணர்வை அவர்களிடம் காட்டவில்லை. அன்று மாலை, கல்வி அமைச்சருக்குப் பொதுநிகழ்ச்சி இருந்தது. எனவே, அன்று மாலை தான் அமைச்சரைத் தேடிச் செல்லவில்லை. பயிற்று மொழிக் குழு அமைக்கப்பட்டது அடுத்த நாள் காலை 7.50 க்குக் கல்வி அமைச்சர் பங்களாவிற்குள் கால் எடுத்து வைத்தேன். முன் மண்டபத்தில், எதிர்ப்பட்டவர் எவர்? டாக்டர் அழகப்ப செட்டியார். அவர் என்னை வணங்கிவிட்டு, “மற்றவர்கள் பார்ப்பதற்குமுன், நான் முதலில் பார்த்துவிட வேண்டும் என்று, இவ்வளவு அதிகாலையிலேயே வந்தேன். அமைச்சரைப் பார்த்துப் பேசிவிட்டேன். அவரும் ஒப்புக்கொண்டார். “தமிழ் பயிற்று மொழிக்குழு ஒன்றை இலட்சுமணசாமி முதலியார் தலைமையில் அமைக்கும்படி கூறினேன். அதற்கு இசைந்துவிட்டார்.” "அரக்க்கு நம்பிக்கையான ஒருவர் இருக்க வேண்டாமா?" என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/219&oldid=788004" இலிருந்து மீள்விக்கப்பட்டது