பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் பயிற்சி மொழித் திட்டம் 181 "அக் குழுவின் செயலராக உங்களைப் போடும்படி சொன்னேன். அதையும் ஏற்றுக்கொண்டார். உங்களைக் கேட்டால் தயவுசெய்து ஒப்புக் கொள்ளுங்கள்” என்று சொன்னார். இதற்குள், மாடியில் இருந்த கல்வி அமைச்சருக்கு நான் வந்து இருக்கும் தகவல் எட்டிற்று. உடனே என்னை மாடிக்கு அழைத்தார். நான், செட்டியாரிடம் விடைபெற்றுக்கொண்டு மேலே, சென்றேன். நான் நாற்காலியில் அமர்ந்ததும் கல்வி அமைச்சர், அழகப்ப செட்டியார் பேட்டியின்போது நடந்ததைக் கூறினார். ‘நேற்று, குழு அமைக்கலாம் என்று நீங்கள் சொன்னபோதே, நீங்கள் குழுத் தலைவராக இருந்தால் மட்டும்தான் வேலை நடக்குமென்று தோன்றிற்று. “முதல்வர்கள் கூட்டத்தில் இருந்தபடியே நீங்கள் பொது நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டீர்கள். “காலை எட்டு மணிக்கு முன்பு எவர் வந்து தங்களுக்கு ஆலோசனை கூறப்போகிறார் என்று நினைத்து, நான் கோட்டை விட்டுவிட்டேன். “இப்போதும் பரவாயில்லை. நீங்கள் இசைவு தெரிவித்தால், தங்களைத் தலைவராகவும் துணைவேந்தார் முதலியாரைத் துணைத் தலைவராகவும் வேறு சிலரை உறுப்பினர்களாகவும் நியமித்து ஆணை பிறப்பிக்கலாம். மாற்று யோசனைக்காக நான் துது செல்லட்டுமா?” என்றேன். “நான் வாக்குக் கொடுத்துவிட்டேன்; இனி மாறக்கூடாது. நீங்கள் குழுவின் செயலாளராக இருங்கள். எல்லாவற்றையும் சமாளித்துக் கொள்ளலாம்” என்றார் கல்வி அமைச்சர். “முதலியார் தலைமையில் குழு இயங்கினால், அது ஒன்றும் செய்யாது சமாளித்துவிடும். என் முயற்சி ஏதும் பலிக்காது. என்னை அந்தக் குழுவிற்குச் செயலாளராக நியமிக்காதீர்கள்” என்று வேண்டிக்கொண்டேன். கல்வி அமைச்சர் என் வேண்டுகோளுக்கு இடம் கொடுக்க வில்லை. சில வாரங்களுக்குப்பின், குழு அமைப்பு அறிவிக்கப் பட்டது. எதிர்பார்த்தபடியே நடந்தது. செயலர் என்ற முறையில், குழுவின் முதற்கூட்டத்திற்கு முதலியாரிடம் தேதி வாங்குவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது. மெய்யாகவே அத்தனை நிகழ்ச்சிகள் அவருக்கு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/220&oldid=788005" இலிருந்து மீள்விக்கப்பட்டது