உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|B2 நினைவு அலைகள் எப்படியோ தேதி வாங்கி, முதல் கூட்டத்தைக் கூட்டினேன். அக் கூட்டம், செயல் திட்டங்களுக்குப் பதில், தத்துவார்த்த சிந்தனைகளைப் பரிமாறிக் கொண்டு பொழுதைப் போக்கிற்று. பொறுமையாக இருந்தேன். நீண்ட இடைவெளிக்குப்பின் இரண்டாவது கூட்டம் வந்தது. அப்போதும் மேலெழுந்தவாரியான பேச்சுதான் நடைபெற்றது. கூட்டத்தில் ஊமையாக இருந்தேன். கலைந்தபிறகு, இலட்சுமணசாமி முதலியாரின் ஒப்புதல் பெற்று, அவரோடு அவரது அறைக்குச் சென்றேன். "ஐயா! நம்முடையது பொதுக் கூட்டமல்ல. எவ்வளவு காலம், ஆங்கில மொழி வாயிலாகக் கற்பதா, தமிழ்மொழி வழிகற்றால் இடையூறா என்று பொதுப்படையாகப் பேசிக்கொண்டே காலத்தைக் கடத்தி வருவது? “அடுத்த கூட்டத்திலாவது என்ன என்ன செய்யவேண்டும், எது முன்னே, எது பின்னே என்று திட்டவட்டமான ஆலோசனை. களைப் பெற்று, முடிவு எடுங்கள், அய்யா' என்று பணிவோடு வேண்டிக்கொண்டேன். “வேண்டுமென்றே இப்படிச் செய்தேன். சொல்ல நினைத்ததை எல்லாம் சொல்லிவிட்டால், சூடு தணிந்து, நம்மோடு ஒத்துழைப்பார்கள். உரியகாலத்தில் விரைவுபடுத்துவேன்” என்றார் இலட்சுமணசாமி முதலியார். “அதுவும் சரி” என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன். அப்புறம் முதலியாரிடம் சென்று கூட்டத்துக்குத் தேதி கேட்டேன். மூன்று முறை தோற்றேன். ஒவ்வொரு முறையும் கல்வி அமைச்சர் இடம் சொல்லி வந்தேன். முதலியாரின் ராஜதந்திரம் மூன்றாம் முறை, “நீங்கள் பலமுறை வந்துவிட்டீர்கள். இனி நினைவுபடுத்த எனது அலுவலகச் செயலாளருக்கே ஆணையிட்டு விடுகிறேன். அவர் தேதி கேட்டு வாங்கித் தருவார்” என்றார். கல்வி அமைச்சரிடம் அதைக் கூறினேன். “தாங்கள் முதலியாரிடம் பேசி, நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/221&oldid=788006" இலிருந்து மீள்விக்கப்பட்டது