பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ப் பயிற்சி மொழித் திட்டம் TB3 இல்லையென்றால் என்னை விடுவித்து விடுங்கள்” என்று அவரிடம் கேட்டேன். “பொறுங்கள்” என்பதே கல்வி அமைச்சர் கூறிய பதில், பொறுத்தேன்; பல திங்கள் பொறுத்தேன்! மூன்றாவது கூட்டத்திற்கு நாள் கிடைக்கவில்லை. அதுவே வேதனைக்குரியது. அதைவிட வேதனையான ஒன்று நடந்துவிட்டது. அது என்ன? சென்னை சட்டமன்ற மேலவையில், “தமிழ் பயிற்று மொழியாக்குவது பற்றி அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?’ என்ற கேள்வி ஒன்றை ஒர் உறுப்பினர் எழுப்பினார். கல்வி அமைச்சர் தமது பதிலில், கல்லூரி முதல்வர்கள் கூட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். அதன் முடிவுப்படி சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருப்பதை அறிவித்தார். மேலும், “அந்தக் குழுவின் பரிந்துரைகளுக்காக நீண்ட காலமாகக் காத்திருக்கிறேன். இனியும் காலதாமதம் இல்லாமல், ஆலோசனை. களை அனுப்பும்படி, இந்த அவையில் வீற்றிருக்கும் துணைவேந்தரை வேண்டிக் கொண்டிருக்கிறேன்” என்று அமைச்சர் பதில் உரைத்தார். டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் பதில் கூறினார். என்ன பதில்? “உங்கள் அதிகாரியாகிய பொதுக்கல்வி இயக்குநர்தான் குழுவின் செயலாளர். நீங்கள் அவரை முடுக்கியிருக்க வேண்டும்” என்பது பதில், இது கீழ்வெட்டு என்று சொல்வதற்கு மன்னியுங்கள். கல்வி அமைச்சர் சுப்பிரமணியம் என் நிலையை விளக்கினார். “செயலாளர் என்ற முறையில் அவர் உங்களை மூன்று முறை அணுகியுள்ளார். "கூட்டத்திற்கு நாள் கண்டுபிடிக்க உங்களால் இயலவில்லை. தலைவரை ஒதுக்கிவிட்டு, அவரே கூட்டத்தைக் கூட்ட முடியுமா? "அவர் உங்களைப் பார்த்த ஒவ்வொரு முறையும் எனக்குத் தகவல் கொடுத்து வந்தார். இது தவறா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/222&oldid=788007" இலிருந்து மீள்விக்கப்பட்டது