பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 நினைவு அலைகள் "அவர் பேரில் சுணக்கம் என்றால், இப்போதே அவர் மேல் நடவடிக்கை எடுப்போம்” என்று கல்வி அமைச்சர் கடாகப் பதில் கூறினார். இலட்சுமணசாமி முதலியார் என்மேல் புகார் சொல்ல ஆதாரம் இல்லை. என் நிலை அவையோருக்குப் புரிந்தது. இதுவே என் ஆறுதல்! தமிழ் பயிற்சி மொழியாக்கும் திட்டம் இரண்டாம் முறையும் முளையிலேயே கிள்ளப்பட்டுவிட்டது. 24. கல்விக் கட்டமைப்பைக் கலைக்க முயற்சி பள்ளிக் கல்வியின் பல்வேறு படிகள் மக்கள் இனம் சிந்தனையில் முதிர்ந்த காலம் முதல் பிறப்பறுத்தலைக் குறிக்கோளாகக் காட்டி வந்த போதிலும், இதுவரை அது கைகூட வில்லை. கல்விச் சீரமைப்பும் கானல் நீராகப் பிடிபடாமலே போகிறது. இந்த நூறறாண்டின் அய்ம்பதுகளில் இந்தியா முழுமைக்கும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியைப் பற்றி ஆராய்ந்துரைக்க, இந்திய அரசு, டாக்டர் இலட்சுமணசாமி முதலியார் தலைமையில் ஒரு குழு நியமித்ததை முன்னரே குறித்து இருந்தேன் இங்கிலாந்து, அமெரிக்க அறிஞர்கள் இருவரையும் கொண்டிருந்த அக் குழு பல பரிந்துரைகளை வழங்கியது. அவற்றில் ஒன்று, பள்ளிக்கல்விக் கட்டமைப்பு பற்றியதாகும். பள்ளிப் படிப்பு 10 ஆண்டுகள் 11 ஆண்டுகள் இருவேறு நிலை இன்றைய தமிழகம், ஆந்திரம், கர்னாடகம், கேரளம் ஆகிய நான்கு மாநிலங்களில் பள்ளிப் படிப்பு பதினோரு ஆண்டுகளாக இருந்து வந்தது. பம்பாயிலும் அப்படியே அசாம், மேற்கு வங்காளம், வடகிழக்கு எல்லைப் பகுதி ஆகிய பகுதிகளிலும் அப்படியே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/223&oldid=788008" இலிருந்து மீள்விக்கப்பட்டது