உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விக் கட்டமைப்பைக் கலைக்க முயற்சி 185 ஆனால், பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பத்தாண்டுகளில் பள்ளிப் படிப்பு முடிந்தது. மூன்று பகுதிகள் பள்ளிப் படிப்பு மூன்று பகுதிகளாக வகுக்கப்பட்டுச் செயல்பட்டது. பதினோரு ஆண்டு மாநிலங்களில் தொடக்கப் பள்ளி அய்ந்தாண்டு காலம் பிடித்தது. பத்தாண்டு மாநிலங்களில் தொடக்கப் பள்ளி நான்காண்டுகளோடு முடிந்தது. அடுத்த இரண்டு நிலைகளை உயர் தொடக்கப் பள்ளி அல்லது நடுநிலைப் படிப்பு என்றும் உயர்நிலைப் படிப்பு என்றும் அழைத்தார்கள். இந்திய நாடு முழுவதிலும் நடுநிலைப் பள்ளி மூன்று ஆண்டுகளையும் உயர்நிலைப் பள்ளி மூன்று ஆண்டுகளையும் கொண்டதாக இருந்தன. இலட்சுமணசாமி முதலியார் குழு, கல்லூரிக் கட்டமைப்பை ஆய்ந்தது. இளங்கலைப் பட்டத்திற்கு முக்கிய பகுதி, இரு மட்டங்களாக அமைக்கப்பட்டு இருந்தது. 'இன்டர்மீடியட் என்னும் பகுதிக்கு ஈராண்டும், இளங்கலைப் படிப்பிற்கு ஈராண்டும் ஒதுக்கியிருக்கக் கண்டார்கள். நாட்டின் ஒரு பாதியில் பதினான்கு ஆண்டில் இளங்கலைப் பட்டம் பெறவும், மற்ற பாதியில் பதினைந்து ஆண்டுக்குப் பின் அதே பட்டம் பெறவுமாக, கல்விக் கட்டமைப்பு இருந்தது. முதலியார் குழு பரிந்துரை; என் மாறுபட்ட கருத்துகள் முதல் பட்டமாகிய இளங்கலைப் பட்டத்தைப் பெற, நாடு முழுவதற்கும் ஒரே கால அளவை இருக்க வேண்டும் என்று முதலியார் குழு பரிந்துரைத்தது. இதற்கு அவ்வளவு தேவையில்லை என்பது எனது பணிவான, ஆனாலும் ஆழ்ந்து சிந்தித்த முடிவாகும். மேற்கூறிய வேறுபாடு ஆங்கிலேயர் காலத்தில் தோன்றியது. ஒரு நூற்றாண்டு காலமாகத் தொடர்ந்து வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/224&oldid=788009" இலிருந்து மீள்விக்கப்பட்டது