உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 நினைவு அலைகள் இந்தியாவின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குப் படிக்கச் சென்றவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடியவர்களாக இருந்ததால் தொல்லையாகத் தெரியவில்லை. தன்னாட்சி இந்தியாவில் - மொழிவழி மாநிலங்கள் ஏற்பட்ட பிறகு அப்படிக் கல்வி நிலையங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்கள் நூற்றுக்கணக்கில் நூறு பேர்களின் வசதிக்காக, நாற்பது ஐம்பது லட்சம் பேர்களின் முறையை மாற்றிக் கொள்ள முயல்வதா? கடுகை, மலையாகக் கருதி, அம் மலையைக் கடக்கும் சாலை போடும் முயற்சியில் ஈடுபட்டது. நாடு முழுவதும் ஒரே சீரமைப்பாய் இருத்தல் என்றால், அதை இரு வகையில் அடையப் பார்க்கலாம். ஒன்று நாடு முழுவதிலும் பட்டம் பெறப் பதினைந்து ஆண்டு கல்வி தேவை எனச் செய்வது; மற்றொன்று, பதினான்கு ஆண்டுகளுக்குக் குறைப்பது. இந்திய அரசு, என்ன நிலை எடுத்தது? பட்டம் பெற, பதினான்கு ஆண்டுகள் போதுமென்ற நிலை எடுத்தது. அதற்கான ஆதரவைத் திரட்டியது. “ஒருமைப்பாடு வேண்டாமா? வேண்டும் என்றால், ஒரே சீரான கல்விக் கட்டமைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்! இரண்டில் எதை ஏற்றுக் கொள்வது என்று குழம்பாதீர்கள். "வட இந்தியர்களுக்குப் பதினான்கு ஆண்டு காலம் போதுமென்றால், அவர்களுடைய திறமைக்குக் குறையாத தென்னிந்தியர்களுக்கு அந்தக் காலம் போதாதா? போதும். 'முதற் பட்டத்திற்குப் பதினான்கு என்று வைத்துக் கொள்ளுங்கள். "பதினான்கு ஆண்டுகளை மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள் 'முதற்பிரிவு எட்டாண்டு, அடுத்த பிரிவுக்கு மூன்றாண்டு அதோடு உயர்நிலைப் படிப்பு முடிகிறது. வடமாநிலங்கள் தயங்கியதேன்? உருவாகும் பிரச்சினைகள் "அடுத்த மூன்றாண்டு ஒரே பிரிவு: அது பட்ட படிப்பு ஆகும்” - இது இந்திய அரசின் கருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/225&oldid=788010" இலிருந்து மீள்விக்கப்பட்டது