உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விக் கட்டமைப்பைக் கலைக்க முயற்சி #87 இதை ஏற்றுக் கொள்வதானால், வடஇந்திய மாநிலங்கள், தொடக்கப் பள்ளிகளில் ஒராண்டைக் கூட்டி, நடுநிலைக் கல்விக்கு எட்டாண்டாக்க வேண்டும். அதோடு, கல்லூரியில் உள்ள இண்டர்மீடியட் பிரிவையும் பட்டப் பிரிவையும் இணைக்க வேண்டும். ஏற்படும் தொல்லைகள் அப்படி இணைக்கையில், நான்கு ஆண்டுகள் என்பதற்குப் பதில், மூன்று ஆண்டு திட்டமாக்கிக் கொள்ள வேண்டும். இது எளிதா? மொத்தத்தில் பதினான்கு ஆண்டுகள் என்பது அப்படியே நீடித்தாலும், இலட்சக்கணக்கான தொடக்கப் பள்ளிகளில் கூடுதலாக ஒரு வகுப்பைச் சேர்ப்பது பெருந்தொல்லை. கூடுதல் கட்டடம் முதல் ஆசிரியர் ஈறாக ஏற்பாடு செய்ய வேண்டும். கல்லூரி மட்டத்தில் ஒராண்டு குறைப்பதால், பல்லாயிரக் கணக்கான கல்லூரி ஆசிரியர்களுக்கு வேலை போகும். ஆசிரியர்களின் போராட்டத்திற்கு வழிவகை செய்யும். இக் காரணங்களால், வட மாநிலங்கள் கட்டமைப்பை மாற்றத் தயங்கின. பிற மாநிலங்களின் நிலை என்ன? அவை கல்லூரி மட்டத்தில் மட்டும்ே மாற்றம் செய்ய நேரிடும் 2+2 என்று இருப்பதற்குப் பதில் 0+3 என்று மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான். பட்டங்களுக்கு ஒரே மதிப்புதான் என்றாலும் வடஇந்திய சராசரி பட்டதாரியும் தென்னிந்திய சராசரி பட்டதாரியும் ஒரே தரத்தை அடைகிறார்கள் என்று சொல்ல எவ்வித ஆதாரமுமில்லை. அப்படியிருக்க, பள்ளி யிறுதிக்கு அப்பால் மூன்று ஆண்டுகள் போதுமென்று ஏற்றுக் கொள்வது தற்கொலைக்கு ஒப்பாகிவிடலாம் 'மிகையான கல்லூரி ஆசிரியர்களுக்கு எங்கே இடம் கண்டுபிடிப்பது? "எவ்வளவு நீண்டகாலத்திற்கு அவர்களை மிகை ஆசிரியர்களாக வேலையில் வைத்து இருப்பது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/226&oldid=788011" இலிருந்து மீள்விக்கப்பட்டது