பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* rflaוהם היה הח EĦLI ĦTĦTĪ ĦĪīAIF, TIT அந்தச் சுமையை மக்கள் தாங்குவார்களா? - இது மாற்றுக் கருத்து. இதுபற்றி, நாட்டின் உச்சமட்ட கல்வி ஆலோசனைக் குழு சிலமுறை கலந்து பேசியது அநேகமாக அரசியல் வாடை வீசும் அக் குழுவில்கூட ஒருமைப்பாடு காண இயலவில்லை. தமிழக அரசு குழு அமைததது நம் நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு மட்ட 'கல்வியாளர்கள் இதுபற்றி விறுவிறுப்பாக கருத்துப் புயலை எழுப்பிக் கொண்டிருந்தபோது, சென்னை மாநிலத்தில் ஒரு செயற்குழு அரசால் நிறுவப்பட்டது. சென்னை மாநில அரசும் இந்தியக் குழுவின் தலைவராக விளங்கிய இலட்சுமணசாமி முதலியாரின் தலைமையிலேயே மாநில அளவில் ஒரு குழு அமைத்தது. பொதுக்கல்வி இயக்குநராகிய நானும், தென்னிந்திய ஆசிரியர் கழகத் தலைவராகிய திரு. எஸ். நடராசனும், ஆசிரியர் கல்லூரி முதல்வராகிய திரு. எம். ஆர். பெருமாள் முதலியாரும் உறுப்பினர்கள். இக் குழுவின் முதல் கூட்டத்திற்குமுன், கல்வி அமைச்சரைக் கண்டு, கட்டளை கேட்டேன். எங்கள் முடிவு “எது எது நல்லது, அவற்றில் எதெதை எந்த வரிசையில் மாற்றலாம் என்று நீங்களாகவே சிந்தித்து முடிவு எடுத்து அரசுக்கு ஆலோசனை கூறுங்கள்” என்று கட்டளையிட்டார். எனக்குப் பொறுப்பு அதிகமாகிவிட்டது. கல்வி நிலையங்களின் புறநிலையையும் அக நிலையையும் ஆய்ந்து பார்த்தேன். திரு. பெருமாள் முதலியாரோடு கலந்து உரையாடினேன். அன்றைய நிலையில், பள்ளிகளே இல்லாத ஊர்கள் சில ஆயிரக்கணக்கில் இருந்தன. அவ் வூர்களில் தொடக்கப் பள்ளி தொடங்குவது முன்னுரிமைக்குரியன. அவற்றிற்கான கூடுதல் ஆசிரியர்களைப் போதிய அளவு தயார் செய்வது அடுத்த முன்னுரிமைக்குரியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/227&oldid=788012" இலிருந்து மீள்விக்கப்பட்டது