உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விக் கட்டமைப்பைக் கலைக்க முயற்சி 189 உயர்நிலைப் பள்ளிகளில் இடவசதி போதாமை, பாடக் கருவிகள் பற்றாமை போன்ற குறைகள் ஒருபுறம் இருக்கையில், ஆசிரியர்களே இல்லாமை பெரும்குறை ஆகும். மொத்தத்தில் நூற்றுக்கு முப்பது இடங்களில் ஆசிரியர்களே இல்லை. நிரப்பப்பட்ட இடங்களிலும் ஐந்தில் ஒருவர் பயிற்சி இல்லாதவர். இந்நிலையில், கல்லூரிப் படிப்பில் நான்காண்டில் ஒன்றைப் பள்ளிக்கு மாற்றிவிட வேண்டும் என்பதோ, முடியாது என்பதோ போதிய பட்டறிவின் வெளிப்பாடாக இராது. இப்போதைக்கு இதுபற்றிய முடிவைத் தள்ளி வைப்போம். விரைந்து செயல்பட்டு, போதிய ஆசிரியப் பள்ளிகளையும் கல்லூரிகளையும் தொடங்குவோம். ஆசிரியர் கல்லூரிக்கு வருவோர்க்கு அப் பயிற்சி காலத்திற்குத் தேவையான உதவித்தொகை கொடுப்போம். இப்படி மூன்றாண்டுகளில் பட்டதாரி ஆசிரியர்களின் இடங்களை நிரப்புவோம். அதே நேரத்தில் பள்ளிகளில் உள்ள பிற குறைகளைக் களைவோம். இவை முன்னுரிமை பெறட்டும். அப்படி அய்ந்தாண்டு சீரமைத்த பிறகு கட்டமைப்பை மாற்றுவது பற்றி, மீண்டும் கலந்து ஆலோசிப்போம். அதற்குள், இதுபற்றி அனைந்திந்திய கருத்தில், தெளிவு அதிகமாகலாம். இப்படி எங்களுக்குத் தோன்றியது. இக் கருத்தைக் கூறுவதே பொறுப்புடைமை என்று பட்டது. நான், பத்தாண்டுகளுக்கு மேலாக அதேபதவியில் இருந்து, விளைவுகளுக்குப் பதில் சொல்ல வேண்டியவன் என்பதை இருவரும் நினைவுபடுத்திக் கொண்டோம். புள்ளி விவரங்கள், மதிப்பீடுகள் கொண்ட நீண்டகுறிப்பு ஒன்றை, பொறுமையோடு ஆயத்தம் செய்தேன். அவற்றிற்கு சில படிகள் எடுத்தேன். சமரச ஏற்பாடு முதலியார் குழு கூடிற்று. முதலியார், சீரமைப்புப் பின்னணியைப் பொதுவாக விளக்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/228&oldid=788013" இலிருந்து மீள்விக்கப்பட்டது