பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 நினைவு அலைகள் எனது குறிப்பை அவரிடம் கொடுத்தேன். அவர், உறுப்பினர்களுக்குத் தந்தார்; படிக்க நேரம் கொடுத்தார். நான் கண்ட குறைபாடுகளை அவரது அறிக்கையிலும் சுட்டிக்காட்டி இருப்பதாக இலட்சுமணசாமி முதலியார் கூறினார். இக் குறிப்பின் மதிப்பீடே தமது அறிக்கையின் மதிப்பீடும் என்றார். 'நீங்கள் குறித்துள்ள செயற்பாடுகளை அரசு ஏற்றுக் கொள்ளும், போதிய அக்கறையோடு நிறைவேற்றும் என்பதற்கு என்ன உறுதி” என்று என்னைக் கேட்டார். அரசிடமிருந்து அப்படி ஒரு கடிதம் பெற்றுத்தர முன் வந்தேன். அவர் முதலில் இசையவில்லை. நீண்ட உரையாடலுக்குப்பின், சமரசம் கண்டேன். "கூட்டத்தை ஒத்தி வைப்பது. நான், கல்வி அமைச்சரைக் கண்டு, அய்ந்து ஆண்டுகளுக்குப் பின், அதே குழுவைக் கொண்டு இதை மறுபரிசீலனை செய்வது என அமைச்சரது ஒப்புதலைப் பெற வேண்டும். கல்வி அமைச்சரின் ஒப்புதல் அதற்கிடையில் டாக்டர் முதலியார் தமது நண்பர்களைக் கலந்து கொண்டு வருவார் - இது சமரச ஏற்பாடு. நான் விரைந்து செயல்பட்டேன். கல்வி அமைச்சர் மாண்புமிகு சுப்பிரமணியத்தைக் கண்டேன் நடந்ததைச் சொன்னதோடு, எனது விரிவான குறிப்பை அவரிடம் கொடுத்தேன். அவர் அதைப் பொறுமையாகப் படித்துப் பார்த்தார். "கட்டமைப்பில் இத்தனை குறைகள் இருப்பது பலருக்குத் தெரியாது. 'அவற்றைப் போக்குவது முதல் வேலையாக இருக்கட்டும். -- 4 + T --- போதிய ஆசிரியர்களை நியமித்துவிட்டு, தர உயர்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவது பொதுநலனுக்குப் பொருத்தமாக இருக்கும். “போதிய ஆசிரியர்களைப் பயிற்றுவிக்க, முதலில் கவனம் செலுத்துங்கள். “முதலியார் குழுவைப் பொறுத்தமட்டில், அய்ந்தாண்டுக்குப் பின் இதே நால்வர் குழுவை - பெயர் குறிப்பிட்டு நியமிப்ப

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/229&oldid=788014" இலிருந்து மீள்விக்கப்பட்டது