பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விக் கட்டமைப்பைக் கலைக்க முயற்சி * - 191 தானாலும் பதவி குறித்து நியமிப்பதானாலும் நியமிக்க ஒப்புகிறேன் என்பதை அவரிடம்.சொல்லலாம். “அதற்கான அறிவிப்பை இப்போதே எழுத்துவழி சொல்லவும் உடன்படுகிறேன்” என்று கூறினார். சமரசம் முறிந்தது இதற்கிடையில் , நான் டாக்டர் முதலியாரின் நிழலாக விளங்கிய இரண்டொருவரைக் கலந்து பேசினேன். அவர்கள் இச் சீரமைப்பின் ஆழத்தையும் பரிமாணத்தையும் மிகவும் குறைத்துக் கணக்கிட்டவர்கள். 'அரசு சொல்வதைப் பல்கலைக் கழகம் கேட்கக்கூடாது என்ற போக்கினர். சமரசத்தை ஏற்க வேண்டாமென்று அவர்கள் அறிவுரை கூறினார்கள். சில நாள்களுக்குப்பின் குழு மீண்டும் கூடிற்று. நான், அமைச்சர் சொல்லி அனுப்பிய செய்தியைக் கூறினேன். எழுத்து மூலம் அதை உறுதிப்படுத்துவார் என்றேன். அதை முதலியார் பொறுமையாகக் கேட்டார்; ஏற்க மறுத்துவிட்டார். “புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைக்கப்பட்ட குழு தள்ளிப்போட ச் சொல்வது சரியாக இராது. நிறைவேற்று வதற்கான திட்டத்தையே கொடுக்க வேண்டும்” என்றார். என் வேண்டுகோள் "செய்ய வேண்டிய நடவடிக்கைகளை வரிசைப்படுத்திக் கொடுங்கள். காலியாக இருக்கும் ஆசிரியப் பதவிகளை நிரப்புவதும் அத்தகைய நடவடிக்கைகளின்பாற் பட்டது என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். “கல்விக் கட்டமைப்பின் முதற் பணியாக இது இருக்கட்டும்” என்றேன். கல்வியில் ஜாம்பவானான அவர் இளம்பிள்ளை'களான அமைச்சர் கருத்தையோ, இயக்குநர் கருத்தையோ, பொருட்படுத்த வில்லை. "பட்டப் படிப்பு மூன்று ஆண்டாக வேண்டும். மிகையாக இருக்கும் ஒராண்டின் படிப்பை உயர்நிலைப் பள்ளியிலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/230&oldid=788015" இலிருந்து மீள்விக்கப்பட்டது