பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 நினைவு அலைகள் பதினோரு ஆண்டிலேயே சொல்லிக் கொடுக்கும் வகையில் பாடத் திட்டத்தை மாற்றவும். 'அதாவது இப்போது இருக்கிற பதினோராவது பள்ளிப் படிப்பிலேயே கூடுதலாகக் கற்றுக் கொடுக்க வேண்டும். "பத்தாம் வகுப்பிற்கும் பதினோராம் வகுப்பிற்கும் முதுகலைப் பட்டம் பெற்ற ஆசிரியர்கள் தேவை” - இப்படி முதலியாரும் நடராசனும் பரிந்துரைத்தார்கள். மாற்றுப் பரிந்துரைகள் திரு.பெருமாள் முதலியாரும் நானும் விரிவான மாற்றுப் பரிந்துரைகள் கூற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். “வடஇந்தியாவில் பதினான்கு ஆண்டுகளில் முதல் பட்டம் பெற்று விடுகிறார்கள் என்பதால், நாமும் அதே காலத்தில் பெற முடியும் என்று அனுமானித்து நடவடிக்கை எடுப்பது அவசரகோலம் ஆகலாம். “ஆசிரியர் தொழிலுக்குப் பட்டதாரிகள் வரத் தயங்குகிறார்கள். ஊதியம் கட்டையாய் இருப்பதும் பதவி உயர்வு வாய்ப்புகள் குறைவாக இருப்பதும் முக்கிய காரணங்கள் ஆகும். "உடனடியாக போதுமான அளவு அதிகப்படியாக ஆசிரியர் கல்லூரிகளைத் திறப்போம்; பயிற்சிக் காலத்திற்கு உதவித் தொகை தந்து இளம்பட்டதாரிகளை ஈர்ப்போம். 'அய்ந்தாண்டுக்குள் காலியாக உள்ள எல்லாப் பதவிகளையும் நிரப்புவோம். “பொருட் குறைகளைப் போக்கவும் தீவிர முயற்சி எடுப்போம். 'அய்ந்து ஆண்டுக்குப் பிறகு, பதினான்கு ஆண்டுகள் போதுமா? இப்போது இருக்கிறபடி பதினைந்து ஆண்டே தேவையா என்பதைக் கலந்து ஆலோசிப்போம். “இன்டர்மீடியட் பாடத்தைப் பள்ளியிலேயே நடத்த முதுகலைப் பட்டதாரிகள் கிடைக்கமாட்டார்கள். சில துறைகளில் ஆண்டுக்கு இருபது முதுகலை பட்டதாரிகளே உருவாகிறார்கள். ஆனால் இருநூறு பேர்கள் தேவைப்படுவார்கள். அவர்களுக்கு எங்கே போவது? “இப்போதைக்குக் கல்விக் கூட்டமைப்பை மாற்ற வேண்டாம்” - இப்படி நாங்கள் ஆலோசனை கூறினோம். அரசு அவற்றின் பேரில் முடிவு எடுக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/231&oldid=788016" இலிருந்து மீள்விக்கப்பட்டது