உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விக் கட்டமைப்பைக் கலைக்க முயற்சி 193 புகுமுக வகுப்பைப் புகுத்தினார் டாக்டர் இலட்சுமணசாமி முதலியார், சென்னைப் பல்கலைச் கழக ஆட்சிக் குழு கூட்டம் ஒன்றில், பேச்சு வாக்கில், கட்டமைப்பு மாற்றம் பற்றிக் குறிப்பிட்டார். 'அரசு, உயர்நிலைப் பள்ளி கட்டமைப்பில் எப்போது மாற்றம் செய்யுமென்று சொல்ல முடியாது. அதற்காக நாம் காத்திருக்கத் தேவையில்லை. “கல்லூரிக் கல்வி, நம்பொறுப்பு. நாம் மாற்றம் செய்யத் தொடங்குவோம். “மூன்று ஆண்டு பட்டப்படிப்பு முறைக்கு மாற்றுவோம். பாக்கியிருக்கும் ஒராண்டை, இடைக்கால ஏற்பாடாக புகுமுக வகுப்பு’ என்று நடத்தலாமா என்று யோசிக்கப்ப்டுகிறது. "அதுபற்றி, விரைவில் கல்லூரி முதல்வர்கள் மாநாடு கூட்ட எண்ணி உள்ளேன்” என்று முதலியார் கூறினார். கல்வி அமைச்சரின் கவனத்துக்கு - அப்போது, மதுரைப் பல்கலைக் கழகம் தோன்றவில்லை. எனவே, முதலியார் நினைத்ததை முடித்து, அரசுக்கு நெருக்கடியை உண்டாக்க முயற்சிப்பதாக எனக்குப் பட்டது. அடுத்த நாள் இச் செய்தியைக் கல்வி அமைச்சரிடம் கூறினேன். கல்லூரிப் படிப்பை 2+2 என்று இருப்பதை 1+3 என்று ஆக்குவது பற்றி என் கருத்தைக் கேட்டார். "வண்டிக் கீலுக்கு முழு வைக்கப் போரைக் கொளுத்தும் முயற்சி” என்று கூறினேன்; விவரமாக விளக்கினேன். “நான் நேற்றுவரை பள்ளிக் கல்வியோடு மட்டுமே தொடர்பு கொண்டவனாயிற்றே, "எனக்கு இதுபற்றித் தெரியுமா?’ என்று நாளை நீங்களோ, பிறரோ எண்ன நேரிடலாம். “எனவே, தங்களுக்கு வேண்டியவர் சிலரைக் கலந்து பாருங்கள். அவர்களும் இத்தகைய மாற்றத்தை ஒப்ப மறுத்தால், தயவுசெய்து அதுபற்றிப் பொது அறிவிப்புச் செய்யாதீர்கள். “சென்னைப் பல்கலைக் கழகத்திற்குத் தாங்கள் அலுவல் பற்றிய இணைவேந்தர். டாக்டர் முதலியார் அரசால் நியமிக்கப்பட்ட துணைவேந்தர். தங்கள் இருவருடைய உறவும் கணவன் மனைவி உறவுக்கு ஒப்பானது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/232&oldid=788017" இலிருந்து மீள்விக்கப்பட்டது