பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 நினைவு அலைகள் 'அதனால், தாங்கள், கல்லூரிக் கல்வி பற்றி ஏதுவும் சொல்ல நினைத்தால், அதை நேரே, அவரிடம் சொல்லுங்கள். "அப்படிப் பேசும்போது, நானோ, கல்விச் செயலரோ, வேறு பெரியவரோ இல்லாதிருத்தல் நல்லது. "பிறருக்குத் தெரியாமல், தங்கள் கருத்தைத் துணைவேந்தர் காதில் போட்டுவிட்டால், அவர் அதைக் கூடியவரையில் ஏற்றக் கொள்ளப் பார்ப்பார். “நாற்பது ஆண்டுகள், அரசு ஊழியத்தில் ஏற்பட்ட, பண்பட்ட, கட்டுப்பாடு அவரை விட்டுப் போகவில்லை. 'எனவே, நாங்கள் எவரும் அறியாமல், அவரோடு கலந்துரையாடுங்கள். நாங்களும் அறியாதவர்களாகத் தோற்றமளிக்கிறோம்” என்றேன். சி. சுப்பிரமணியத்தின் தலையிடாக் கொள்கை சென்னைப் பல்கலைக் கழகக் கல்விமுறை பற்றி இணைவேந்தரும் துணைவேந்தரும் தனியே, காதும் காதும் வைத்தாற்போல் பேசிக் கொள்வது நல்லது என்று இயக்குநராகிய நான் கூறியதைக் கேட்டு, கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம் எரிச்சல்படவில்லை. “இது பற்றி நான் சிந்தித் துப் பார்க்கிறேன்' என்று பதில் கூறினார். அப்போதைக்கு அப்படிச் சொல்லி விட்டு அமைச்சர் நழுவவில்லை. மெய்யாகவே சில கல்லூரி முதல்வர்களையும் பேராசிரியர் களையும் மூத்த பட்டதாரிகளையும் கலந்தாலோசித்தார் எல்லோருமே, கல்லூரிக் கல்வி முறை பழையபடியே நீடிக்கலாம். 2+2 என்பதை மாற்றத் தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்தார்கள். நான் அடுத்த முறை கல்வி அமைச்சரைப் பேட்டி கண்டபோது, அமைச்சர், அத் தகவலை என்னிடம் விவரமாகத் தெரிவித்தார் "அப்படி என்றால், நான் முன்னரே வேண்டிக் கொண்டபடி டாக்டர் இலட்சுமணசாமி முதலியாரோடு தனியாகப் பேசுங்கள்” என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/233&oldid=788018" இலிருந்து மீள்விக்கப்பட்டது