உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விக் கட்டமைப்பைக் கலைக்க முயற்சி 195 “அதைப்பற்றியும் சிந்தித்துப் பார்த்தேன். பல்கலைக் கழகங்கள், சட்டப்படி தன்னாட்சி உரிமை பெற்றிருப்பதுபோதாது, அது அன்றாட நடைமுறையிலும் மெய்யாகவே உரிமையோடு இருக்க வேண்டும். “பல்கலைக் கழக நடைமுறையில் தலையிடுவது அதுவும் அரசியல்வாதிகள் தலையிடுவது நல்லதல்ல. "தனியாகப் பேசினாலும் அறியப்படாத இரகசியம் இல்லை என்பார்களே அதைப்போல், அது சில வாரங்களில் வெளிப்படும். பல்கலைக் கழகத்தில் அரசியல் தலையீடு என்ற குற்றச்சாட்டுக்கும் பழிக்கும் ஆளாக நேரிடும். “முன்னேர் போன வழியில், பின்னேர் செல்லும் ஒருமுறை தலையிடத் தொடங்கிவிட்டால், அடுத்து அடுத்து தலையிடும் போக்கு வளரும். “உயர்மட்டக் கல்விக்குப் பொறுப்பான பல்கலைக் கழகம், அரசு ஆட்டுவதைப் போன்று ஆடத் தொடங்கினால், அப்புறம் சமுதாயமே கெட்டுவிடும். “எனவே, புகுமுக வகுப்பு கொண்டு வரவேண்டாமென்று துணைவேந்தரிடம் தனியாகவும் பேச வேண்டாமென்று முடிவு செய்துவிட்டேன்” என்றார். தன்னிடம் பணிபுரிவோருக்கும் முழுக் கருத்துரிமை கொடுப்பதில் பெருமை பெற்றவர் சி. சுப்பிரமணியம். கல்வியாளருக்குக் கருத்து உரிமை --- "அலுவல் பற்றி அரசின் சார்பில், ஆட்சிக் குழு உறுப்பினராக இருக்கும் நான் அதுபற்றி ஊமையாக இருந்து விடட்டுமா?” என்று கேட்டேன். "அனுபவமிக்க கல்வியாளர் - புதிய திட்டம் வந்தால் அதை நிறைவேற்றும் பொறுப்பை உடையவர் என்கிற முறையில் நீங்கள் மெளனமாக இருப்பது அவ்வளவு சரியல்ல. "புகுமுக வகுப்பு பற்றி வாதிக்கும்போது, அரசு இlதல நடுநிலைமை வகிக்கிறது என்ற முன்னுரை கூறிவிட்டு, நான் கல்வியாளர் என்ற முறையில் தனிப்பட்ட கருத்தைத் தெரிவிப்பதாகச் சொல்லுங்கள்” என்று எனக்குக் கட்டளையிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/234&oldid=788019" இலிருந்து மீள்விக்கப்பட்டது